scorecardresearch

நாளைய நாயகி சாரா பர்த்டே கொண்டாட்டம்: எத்தனை வயசுன்னு ஓபனா சொல்றாங்களே..!

அர்ச்சானவின் தங்கையான அனிதா இண்ட்ரோ கொடுக்க அர்ச்சானாவின் மகள் சாராவை எங்கே செல்கிறோம் என்று தெரியாதபடி அழைத்துச்செல்கின்றனர்.

நாளைய நாயகி சாரா பர்த்டே கொண்டாட்டம்: எத்தனை வயசுன்னு ஓபனா சொல்றாங்களே..!

நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமாக அர்ச்சனா தனது மகளின் பிறந்த நாளை வில்லா புக் செய்து கொண்டாடியுள்ள நிகழ்வு தற்போது சின்னத்திரை வட்டாராத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2000-ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் அர்ச்சனா. சன் டி.வி,, விஜய் டி.வி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் தொகுத்து வழங்கிய காமெடி டைம், இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, சரி கம பா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் டி.வியின் தொகுப்பாளியாக உள்ள அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் பல நெகடீவ் விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ச்சனா சமூக வலைதளமான ட்விட்டரில் இருந்து விலகினார். ஆனாலும் அர்ச்சனாவின் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து லாக்டவுனில், வாவ் லைஃப் என்ற யூடியூப் சேனலை தொடங்கிய அர்ச்சனா அதில் ஹோம் உள்ளிட்ட பல டூர் தொடர்பான வீடியோக்ளை பகிர்ந்து வந்தார்.

இந்த வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அர்ச்சனாவுக்கு உண்டான ரசிகர்க்ள பட்டாளமும் எகிறியது. இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள தனது மகளின் 15-வது பிறந்தநாள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு அர்ச்சானவின் தங்கையான அனிதா இண்ட்ரோ கொடுக்க அர்ச்சானாவின் மகள் சாராவை எங்கே செல்கிறோம் என்று தெரியாதபடி அவரை அழைத்துச்செல்கின்றனர். வீட்டில் இருந்து கிளம்புவது முதல் சாராவுக்காக புக் செய்த வில்லா வருவது வரை அனைத்தையும் அவருக்காக விளக்கி சொல்லிக்கொண்டே வருகின்றனர்.

இந்த பேச்சுக்களை வைத்து சர்ப்ரைஸ் என்ன எனபதை அறிந்துகொள்ளும் சாரா மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகிறார். இறுதியாக வில்லாவை பார்த்தவுடன் இந்த மாதிரி பிரைவேட் வில்லா புக் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கவே இல்லை என்று தனது அம்மா அர்ச்சனாவையும் அனிதாவையும் கட்டி அனைத்துக்கொள்கிறார்.

சாரா கேக் வெட்டுவது முதல் ஸ்விம்மிங் செய்து விளையாடுவதை அனைத்தும் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil vj archana celebrate her daughter birthday in private villa