New Update
/indian-express-tamil/media/media_files/XUIqo6V4GjnXBruPenlU.jpg)
பிரபல தொகுப்பாளியின் பள்ளிப்பருவ புகைப்படம்
ஜீ தமிழில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள தொகுப்பாளி ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொகுப்பாளியின் பள்ளிப்பருவ புகைப்படம்
சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு தொகுப்பாளினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னித்திரையில் பிரபலமான தொகுப்பாளியயாக வலம் வருபவர் அர்ச்சனா. சன்டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகினார். சில வருடங்களுக்கு பிறகு ரீ-என்டரி கொடுத்த இவர், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், சூப்பர் மாம் சீசன் 1,2 மற்றும் 3-ல் தனது மகள் சாராவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தனது மகள் சாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.
அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்து சமூகவலை தளங்களில் அவர் மீது அவரது மகள் சாரா மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், அவர்கள் தங்களது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாரா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது தனது நண்பருடன் இருக்கும் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தற்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதில் நீ யார்னு எனக்கு தெரியும் நான் யார்னு உனக்கு தெரியும் நம்ம ரெண்டு பேரும் யார்னு இந்த ஊருக்கே தெரியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.