சேனலை மாற்றும் பாவனா; விஜய் டி.வி-யுடன் என்ன பிரச்னை?

Tamil Serial Update : சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடும்போது விஜே பாவனா, தான் இனிமேல் விஜய் டிவிக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

Tamil VJ Bhavana New Program Update : தமிழ் தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் சீரியல்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. அதற்கு இணையாக ரியாலிட்டி ஷோக்களும் பெருகி வருகிறது. ஆனால் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒரு சேர கலந் கொடுப்பதில் விஜய் டிவி முன்னிணியில் இருந்து வருகிறது. இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறதோ அந்த அளவிற்கு ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

அதில் குறிப்பாக சொல்லப்போனால், ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமாகும் அளவுக்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள தொகுப்பாளினி விஜே பாவனா. ராஜ் டிவியில் தனது தொகுப்பாளினி கெரியரை தொடங்கிய பாவனா அதன்பிறகு விஜய் டிவியில் தனது பணிகளை தொடங்கினார். இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் விஜய் டிவியின் முன்னாள் தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தைபெற்றார். அதன்பிறகு ஸ்டார் ஸ்போர்ஸ் சேனில்ல கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கு வாய்ப்பு கிடைத்த இவர், விஜய் டிவியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு விஜய்டிவி பக்கம் திரும்பாத அவர், தற்போது கிரிக்கெட் போட்டி, ப்ரோ லீக் கபடி போட்டி மற்றும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பாவனா அடிக்கடி ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் பேசும்போது ஒரு ரசிகர் நீங்கள் மீண்டும் விஜய் டிவிக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாவனா, இனிமேல் விஜய் டிவிக்கு வர வாய்ப்பில்லை என்று பதில் அளித்துள்ளார். ஆனால் அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் வி டான்ஸ் 2 நிகழ்ச்சிய தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் பாவனாவுக்கு விஜய் டிவிக்கும் என்ன பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil vj bhavana speek with fans in instagram and say about vijaytv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com