குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலை – பிரியங்கா இடையே எழுந்த மோதல் தற்போது வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மாகாபா ஆனந்த், டி.ஜே.பிளாக் வெளியிட்டுள்ள செருப்பு, துடைப்பம் புகைப்படங்களுடன் கூடிய பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், தொகுப்பாரளாக பங்கேற்ற மணிமேகலை, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், தனது வேலையை பார்க்க விட மாட்டேங்கிறார். எனது வேலையில் தலையிடுகிறார். எனக்கு தன் மானம் இருக்கு என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் பிரியங்காவை தான் சொல்கிறார் என்ற கூறி, பிரியங்காவுக்கு எதிராக கருத்து சொல்ல தொடங்கினர். மேலும், பிரியங்கா வந்ததில் இருந்து விஜய் டிவியில் இருந்து வெளியேறிய தொகுப்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு கடுமையாக விமர்சித்து மணிமேகலைக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அதே சமயம் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதில் மாகாபா ஆனந்த், இதற்கு முன்பு இந்த மோதல் குறித்து கேட்டபோது, இதை பற்றி எதுவும் தெரியாமல் கருத்து சொல்ல கூடாது என்று கூறியிருந்த நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களை சொம்பு என்று கூறியிருந்த மணிமேகலை வீடியோ வெளியானதை தொடர்ந்து தற்போது மாகாபா ஆனந்த், பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செருப்பு போட்டோவை வெளியிட்டு, சனிக்கிழமை எல்லாம் ப்ரியாதான் இருப்பாங்க. சோ வீடியோ போடும். வாங்க செருப்பு போட்டோதான் இருக்கு என்று கூறியுள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது மணிமேகலை சனிக்கிழமை தோறும் பதிவுகளை வெளியிட்டு வருவதை தான் மாகாபா குறிப்பிட்டு இனி வீடியோ போட்டால் செருப்புதான் என்பது போல் கருத்து தெரிவித்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். அதேபோல் டி.ஜே.பிளாக் துடைப்பத்தை வைத்து மாகாபாவை பின் தொடர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருமே பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்ட நெட்சன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/ASFK8npbfGbx1VLOooA0.jpg)
குறிப்பாக இவர்கள் செருப்பு மற்றும் துடைப்பத்தை வைத்து வெளியிட்டுள்ள பதிவுகளுக்கு ஒரு நெட்டிசன், இந்த சொம்புக்கு என்ன மரியாதை, இந்த செருப்பை எடுத்து ஸ்டோரி போடுற என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“