மா.கா.பா -வுக்கு அர்த்தம் இதுதான்; இப்போ இது ஒரு ப்ராண்டு: தனது பெயருக்கு விளக்கம் கொடுத்த மா.கா.பா. ஆனந்த்

இந்த மா.கா.பா என்றால் என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விக்கு தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மா.கா.பா என்றால் என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விக்கு தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Makapa anand

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளாகளில் ஒருவராக இருப்பவர் மா.கா.பா. ஆனந்த். விஜய் டிவியின் அது இது எது, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர், சின்னத்திரை மட்டுமல்லால், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, வானவராயன், வல்லவராயன், நவரச திலகம், கடலை, அட்டி, பஞ்சு மிட்டாய், மாணிக், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பினை பெற்றது. சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஆனந்த், பிரபலமாக முக்கிய காரணங்களில் ஒன்று மா.கா.பா என்று அவர் பெயருக்கு முன்னாள் உள்ள இந்த வார்த்தை தான்.

இந்த மா.கா.பா என்றால் என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விக்கு தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவரிடம் மா.கா.பா என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,  முதலில் நான் சூரியன் எப்.எம்.-ல் வேலை செய்வதற்காக சென்னைக்குச் சென்றேன். நான் சுமார் இரண்டு வருடங்கள் அங்கே வேலை பார்த்துவிட்டுத் திரும்ப வரும்போது, ரேடியோ மிர்ச்சிக்குத் தேர்வாகி மீண்டும் சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அப்போது நான், "இல்லை, எனக்குக் கோயம்புத்தூர் தான் வேண்டும்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "பைத்தியக்காரப் பையனே, அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நீ ஏன் கோயம்புத்தூர் போகிறாய்?" என்றார்கள். எனக்கு சென்னைக்குத் தான் பணி நியமனம் கிடைத்தது. ஆனாலும் நான் கோயம்புத்தூர் போவதாகச் சொல்லி சண்டை போட்டு அதைக் கேட்டு வாங்கினேன். ஏனென்றால், அப்போது என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவளை விட்டுவிட்டு வருவதற்கு எனக்கு மனம் இல்லை. ரிஸ்க் எடுக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

Advertisment
Advertisements

"நமக்கு நம் குடும்பம், நன்றாக இருக்க வேண்டும், நம்ம கூட இருக்கணும்" என்று சொல்லி நான் அங்கே கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டேன். ஐ.எம்.ஆர்.பி. (IMRB) என்று சொல்லப்படும் ஒரு மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் இருக்கிறது. அவர்கள் கணக்கெடுப்பு நடத்தும்போது, யாருக்கெல்லாம் உங்களைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள். ரேடியோ மிர்ச்சி எடுத்த ஒரு கணக்கெடுப்பில், எல்லாப் பட்டியலிலும் ஒரு முதல் ஐந்து இடங்களில் எங்கேயோ ஒரு இடத்தில் என் பெயர் இருந்தது.

அப்போது அவர்கள் என்னிடம், "நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு வர வேண்டும் என்றால் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்கள். ஏனென்றால், நீங்கள் சூரியன் எப்.எம்-ல் இருந்து வந்திருக்கிறீர்கள் என்றார்கள். நான் வேறு என்ன பெயர்கள் வைக்கலாம் என்று யோசித்தேன், எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது மிர்ச்சி செந்தில் தான் என்னுடைய பாஸ். அவர் என்ன சொன்னார் என்றால், "தம்பி, இதைப் பார்" என்று சொல்லி, "மா.கா.பா" என்று குறிப்பிட்டார்.

"மா.கா.பா" என்பது அஞ்சுக்கும் மேற்பட்ட வேலைகளுக்குப் பெயர். ஆம், அங்கே (வட இந்தியாவில்) படிப்பவர்கள் எல்லோரும் இந்தியர்கள்தானே. வட இந்தியாவில் உள்ளவர்கள் "மா.கா.பா" என்றால் அம்மாவின் அப்பா என்று அர்த்தம். அப்படியே ஆரம்பித்ததுதான் இந்தப் பெயர். இப்போதும் வீட்டிலேயே என் மனைவி என்னை "மகாபா" என்றுதான் கூப்பிடுவார். வெளியிலும் எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். என் கேசட்டில் பெயர் மாற்றவில்லையே தவிர, இது ஒரு பிராண்டு ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

Makapa Ananth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: