அவசரத்தில் மாறிய செருப்பு: பாஸ்போர்ட் ஆபீஸில் நடந்த அவமானம்; மணிமேகலை வைரல் வீடியோ!

யாராவது கேட்டால் இதுதான் ட்ரெண்டுனு சொல்லி சமாளிச்சிடுங்க என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாராவது கேட்டால் இதுதான் ட்ரெண்டுனு சொல்லி சமாளிச்சிடுங்க என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
VJ Manimegala

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் வி.ஜே.மணிமேகலை, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தான் அவமானப்பட்டதாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினயாக சின்னத்திரையில் அறிமுகமாக வி.ஜே.மணிமேலை, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தனது காதலர் ஹூசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகிய அவர், ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு, விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய இவர், தற்போது ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவது வழக்கம். சமீபத்தில் கூட, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து இவர் பதிவிட்ட ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கோவில் தொடர்பான பணிகளை போட்டோ எடுத்து பதிவிட்டு தனது சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், இதற்கு அரசு சார்பில் பதிலும் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் தனது ஒவ்வொரு நடவடிக்கையும் யூடியூப் சேனலில், வீடியோவாக பதிவிடும், மணிமேலை, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் தற்போது அவர் தான் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவமானப்பட்டதாக வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

தனது கணவருடன் பார்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற அவர், அவரசத்தில் செருப்பை மாற்றிப்போட்டுக்கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றபிறகு தான் செருப்பு மாறியிருப்பதை பார்த்த அவர், யாரேனும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று, 2 மணி நேரமாக கூனி குறுகி நின்றுகொண்டிருந்துள்ளார். ஒரு வழியாக வேலை முடிந்து வெளியில் வந்த அவர், தனது கணவர் ஹூசைனிடம் சொல்ல, அவரோ காருக்குள் இருந்துகொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அதன்பிறகு நீங்களும் இதுபோன்ற தவறை செய்யாதீர்கள் என்று மணிமேகலை சொல்கிறார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இதுதான் இப்போதைய ட்ரெண்ட் என்று சொல்லிவிடுங்கள் என்று சிலர் கூறி வரும் நிலையில், நீங்கள் செய்த தவறை நீங்களே ஒப்புக்கொண்டு அதையும் வீடியோ எடுத்து போட்ருக்கீங்களே என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vj Manimegalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: