விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறியுள்ள வி.ஜே.மணிமேகலை தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வெளியிட்டுள்ள அறிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினயாக சின்னத்திரையில் அறிமுகமாக வி.ஜே.மணிமேலை, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தனது காதலர் ஹூசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகிய அவர், ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு, விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய இவர், தற்போது ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை. மிகுந்த, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொடுக்கிறேன். 2019 நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்ற ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது. அன்றில் இருந்து இதே நிலை தான் இருக்கிறது. ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை!
என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார்.
குறிப்பாக ஆங்கர்ஸ் பார்ட்டில், அவர் நிகழ்ச்சியின் குக்காக இருக்க வேண்டும், ஆனால் அவர் அதை அடிக்கடி மறந்துவிடுகிறார் மற்றும் வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் நிறைய குறுக்கிடுகிறார். நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை சொல்வதும் கூட இந்த சீசனில் குற்றமாகிவிடுகிறது. ஆனால் எப்போதும் எனக்கு எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
பல எதிர்மறை மற்றும் ஆதிக்கம் நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி அல்ல. எனவே நான் இனி அதன் பகுதியாக இல்லை. நான் 2010 முதல் இந்தத் துறையில் இருக்கிறேன், இது ஆங்கராக எனது 15வது ஆண்டு. இதில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன ஆனால் இதுபோன்ற முதிர்ச்சியற்ற நடத்தைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவளுக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழ்க & வாழ விடு. மேலும் மக்கலே, கோமாளியுடன் எங்களுக்குப் பிடித்த சமையல்காரரின் அனைத்து நினைவுகளையும் நான் எப்போதும் போற்றுவேன் & சீசன் 1 முதல் நடப்பு சீசன் வரை நான் மிகவும் தொழில்முறை தயாரிப்புக் குழுவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரின் அன்பிற்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.