New Update
/indian-express-tamil/media/media_files/qX4vzJRdXE8IPpk5GF2D.jpg)
ஏய் மணிமேகலை என்று பிரியங்கா சொல்ல, நீங்க, பேசுறது டிஸ்ரப் ஆகுது நீங்க எதுக்கு கத்தி கத்தி பேசிட்டு இருக்கீங்க, நாங்க சொல்றோம்ல முடிச்சிடுரோம்னு என்று மணிமேகலை சொல்கிறார்.
விஜய் டிவியின் பிரியங்கா – மணிமேகலை இடையேயனா மோதல் பிரச்னை இன்றும் தீராத நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பிரியங்கா மணிமேகலை இடையேயான மோதல் தொடர்பான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி ஷோவான இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த சீசனில், ரக்ஷனுடன், மணிமேகலை தொகுப்பாரளாக களமிறங்கினார். வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்துள்ளார்.
அதேபோல் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கண்டஸ்ட்ண்டாக பங்கேற்றுள்ளார். அதே சமயம் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில், இருந்து பிரியங்கா தான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது போல் நடந்துகொள்வதாகவும், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்றும் கூறிய மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தற்போது விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் நிகழ்ச்சியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில், ஏய் மணிமேகலை என்று பிரியங்கா சொல்ல, நீங்க, பேசுறது டிஸ்ரப் ஆகுது நீங்க எதுக்கு கத்தி கத்தி பேசிட்டு இருக்கீங்க, நாங்க சொல்றோம்ல முடிச்சிடுரோம்னு என்று மணிமேகலை சொல்கிறார். இதை கேட்ட பிரியங்கா நீ என்ன சொல்றதுக்கு வா பாக்கலாம் வா என்று சொல்கிறார். அதற்கு மணிமேகலை ஷோன்னா எப்படி இருக்கும்னு முதலில் கற்றுக்கொள்ளுங்கள் ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கீங்க என்று சொல்கிறார்.
இதை கேட்ட பிரியங்கா உனக்கு என்ன பிரச்னை என்று கேட்டுவிட்டு, ஒரு நாள் கூட இவளது விஷயத்தில் நான் போட்டி போடல என்று சொல்ல, அதற்கு மணிமேகலை அவ இவனுக்கு பேசுற வேலை வச்சிக்காதீங்க என்று சொல்கிறார். இதை கேட்ட பிரியங்கா ஆமாம் என்னை அனுப்பனும் வெளியில என்று சொல்ல, நீங்க எப்படி வேனாலும் பேசுங்க மரியாத இல்லாம பேசுறீங்க, என்று மணிமேகலை சொல்ல, யார் வெளியில் போகிறார் என்று பார்க்கலாம் என்று பிரியங்கா சவால் விடுவது போல் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.