scorecardresearch

15 வயதுக்கு மேல் பிரியங்கா ஒரே தொல்லை: ஃபேமிலி சீக்ரெட்ஸ் பகிர்ந்த அம்மா

பிரியங்கா அவரது சகோதரர் இருவரும் அவர்களது அம்மாவுடன் உரையாடுவது போன்று தொடங்குகிறது.

Priyanka
விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவி தொகுப்பாளி விஜே பிரியங்கா தனது குடும்பத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் பல ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஷோக்கள் மட்டுமல்லாமல், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சிகளும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் தற்போதைய நிலையில், தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும், ப்ரீ நேரங்களில் வெளியில் சக தொகுப்பாளர்களுடன் சுற்றுலா செல்வது பிரியங்காவின் வழக்கம். அந்த வகையில் இவர் அவ்வப்போது வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தை கலக்கும். 

அந்த வகையில் தற்போது இவர் குடும்பத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரியங்கா அவரது சகோதரர் இருவரும் அவர்களது அம்மாவுடன் உரையாடுவது போன்று தொடங்குகிறது. இதில் வீட்டில் யார் பெஸ்ட் எந்த விஷயத்தில் என்று பிரிங்காவின் சகோதரர் கேட்க அதற்கு அவர்களது அம்மா பதில் சொல்கிறார்.

இதில் ஒரு கேள்வியில் யார் நல்ல பாடுவா என்ற கேள்விக்கு பிரிங்கா என்றும், ஆட்டத்திற்கு அவரது சகோதரர் என்றும் பதில் அளிக்கும் அம்மா, சிறிய வயதில் யார் சேட்டை என்ற கேள்விக்கு மகன் 5 வயது வரை சேட்டை பண்ணினான். மகள் 15 வயது வரை சேட்டையே இல்லை. ஆனால் 15 வயது முதல் இப்போதுவரை கடுமையான சேட்டை என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil vj priyanka new video with her family viral on youtube