பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், 20 பேர் உள்ள ஒரு வீட்டையே நிர்வாகம் செய்ய முடியாத கமல்ஹாசனுக்கு இந்தியா அல்லது தமிழகத்தை கொடுத்தால் எப்படி நிர்வகிப்பார் என்று விஜே வைஷூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி உரிமை குரல் தூக்கியதால், பிரதீப் தரப்பு நியாயத்தை கூட விசாரிக்காமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினார் தொகுப்பாளர் கமல்ஹாசன்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலும், வெளியில் சமூகவலைதளங்களிலும் பிரதீப்-க்கு ஆதரவு பெருகிய நிலையில், பலரும் பிக்பாஸ் மற்றும் தொகுப்பாளர் கமல்ஹாசனை கடுமையாக விர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து வரும் நடிகை விஜே வைஷூ, பிரதீப் விவகாரத்தை தீர்க்க முடியாத கமல்ஹாசனிடம் நாட்டை கொடுத்தால் என்ன நடக்கும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மரியாதை கொடுத்தால் தான் திரும்ப கிடைக்கும் என்று கமல்ஹாசன் கூறினார். இதை ஒரு பொதுவான பார்வையாளாராக பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. இவர் நியாயமானவர். தனிச்சுவை கட்சி நடத்துகிறார். ஒரு 20 பேரை வைத்து சபையை கூட்டி, ஒரு ஆணுக்கான பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பெண்கள் சொன்னார்கள் என்பதால் அவரை வெளியில் அனுப்பிவிட்டார்.
இந்த விவகாரத்தில பெண்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிய கமல்ஹாசனிடம், இந்த இந்தியாவை கையில் கொடுத்தால், ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால் கமல்ஹாசன் மாதிரியாக வொர்ஸ்ட் தொகுப்பாளரிடம் போவதை விட்டுவிட்டு, வருங்காலத்தில் சிம்பு மாதிரியான ஆட்களுக்கு கொடுக்கலாம். இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகர்ஜூனா ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்கள.
அவர்கள் எல்லாம் சிறப்பாக பண்ணும்போது உங்களுக்கு என்ன நீங்கள் தான் உலக நாயனாச்சே, நீங்கள் பல விஷயங்களை யோசிக்கும் ஒரு நபர். நல்ல நடிகர் நீங்கள் ஏன் இதை தட்டி கேட்க கூடாது? நீங்கள் உள்ளே அனுப்பிவிட்டு ரெட்கார்டு உங்கள் விருப்பமா என்று கேட்டால் அவர்கள் அதைதான் தூக்குவார்கள். அதேபோல் மாயா தான் ஒரு பெண் என்பதை பயன்படுத்தி ஒரு கேமில் ஆணோட வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“