புஷ்பா பாடலுக்கு புன்னகை நடனம்… காமெடி நடிகையின் கலக்கல் வீடியோ

Tamil Cinema Update : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது தனது டான்ஸ் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்

Tamil CInema Update : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகை ஷாலு ஷம்மு. 1998-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் தோழி மற்றும் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து தெகிடி, மான்கராத்தே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ரெக்க திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட சமூகவலைதளங்களில் பெரிய பிரபலமாக உள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 6 லட்சம் ஃபலோயர்கள் உள்ளனர். இனால் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது தனது டான்ஸ் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். மேலும் கவர்ச்சியாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஊ சொல்றியா மாமா என்று தொடங்கும் அந்த பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த பாடலை பலரும் டப்ஸ்மாஷ் செய்து வௌயிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஷாலு ஷம்மு இணைந்துள்ளார்.

இந்த பாடல் தமிழில் இருந்தாலும் ஷாலு ஷம்மு தெலுங்கி வெர்ஷனுக்கு நடனமாடியுள்ளார்.  ஆரஞ்சு நிற வேலையில் அவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ள இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil young actress shalu shammu dance for pushpa movie song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com