சமூக வலைதளமன யூடியூபில் தானாக வீடியோ உருவாக்கியும், நடிப்பு மற்றும் பிற திறன்களை வெளிக்காட்டியும், சமையல் வீடியோக்களை பதிவிட்டு புகழ்பெற்று வருகின்றனர். ஆனால் இதில் எந்த வகையிலும் இல்லாமல் சாப்பாடு சாப்பிட்டே யூடியூபில் செலிபிரிட்டியாக வளர்ந்தவர் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன்.
Advertisment
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கிராமத்தில் ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வரும் இவர், யூடியூப்பில் சாப்பாட்டு ராமன் என்ற சேனல் வைத்து நடத்தி வருகிறார். இந்த சேனலில், சைவம் அசைவம் என் அணைத்து வகை உணவுகளையும் அளவுக்கு அதிகமான வைத்து அதை சில நிமிடங்களில் காலி செய்து எப்படி சாப்பிட வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது போல வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இவரது வீடியோவுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், யூடியூப்பில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உயர்ந்த்து. சமீபத்தில் தான் இவரது யூடியூப் பக்கம் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றிருந்தது. மேலும் இவர் அதிகமாக சாப்பிடுவதை பார்த்து பலரும் இவருக்கு எப்படி ஜீரணமாகிறது என்று கேள்விகள் எழுப்பி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் சாப்பாடு ஜீரணமாகும் டானிக் ஒன்றைக் கூட தானே உற்பத்தி செய்தாக கூறி அதனை ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்து பல லட்சங்கள் சம்பாதித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இவர் தனது யூடியூப் சேனலில் எந்த வீடியோவும் பதிவேற்றாத நிலையில், கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதால் தான் வீடியோ போடவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதே வீடியோவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து பேசியிருந்த கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சில அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
Advertisment
Advertisements
இதுவே அவரது கைதுக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. அவர் கொடுத்த்து பொதுவான அது பொதுவான அறிவுரைகள் தான் என்றாலும், அவர் சித்தா மருத்துவராக இருந்துகொண்டு ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவரது சிகிச்சை மையத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது, அவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது தெரியவந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் சில மேலும், மருந்துகளும் கைப்பற்றப்பட்டது.
(வீடியோவில் 9.30 நிமிடத்தில்)
பொற்செழியன் முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்ததால் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினார். அப்போது அவரது வழக்கறிஞர், “ பொற்செழியனின் வயது மூப்பு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிணையில் விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட, நீதிபதி பொற்செழியனை பிணையில் விடுவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil