Youtuber Prashant Say About Actor Vadivelu : தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக தனது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ள முன்னணி நடிகரான வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்துகொள்வார் என்பது குறித்து அவருடன் நடித்த யூடியூப் பிரபலம் பிரஷாந்த் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான வலம் வருபவர் வடிவேலு. கடந்த 1988-ம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், தற்போதுவரை 100-க்கு மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் தொடங்கி ஒரு சில படங்களில் தனி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுள்ளார்.
ஆனால் இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து ஷங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு 4 வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வந்த வடிவேலுக்கு தற்போது தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார்.
வடிவேலு 4 வருடங்கள் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் அவர் திரைத்துறையில் இல்லாததை உணர முடியாத அளவிற்கு அவரது படங்களை பயன்படுத்தி மீம் கிரியேட் செய்து வடிவேலுவை மக்கள் மறந்துவிட முடியாத வகையில் செய்துவிட்டனர். யாரை கலாய்க்க வேண்டும் என்றாலும், அதில் வடிவேலு
இந்நிலையில். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பிரஷாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்தும், படப்பிடிப்பில் வடிவேலு எப்படி நடந்துகொள்வார் என்றும் பிரஷாந்த் பகிர்ந்துள்ளார்.
வடிவேலு தான் நடிக்கும் காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் தன்னை தானே திட்டிக்கொள்வார். இந்த காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக எந்த லெவலுக்கும் போகக்கூடியவர். முன்னணி நடிகர் என்ற அலட்டல் இல்லாமல், சட்டையை கிழித்துக்கொண்டு நடிக்கும் காட்சிகள் வந்தாலும், அதனை படப்பிடிப்பு தளத்தில் தானே சட்டையை கிழித்துக்கொண்டு நடிப்பார். இதற்காக கேரவனில் எல்லாம் செல்ல மாட்டார்.
வடிவேலு ஒரு நடிப்பு பல்கலைகழகம். தான் மட்டுமல்லாது தன்னுடன் நடிக்கும் சக நடிகருககும் நடிப்பை சொல்லித்தருவார் என்று கூறியுள்ளார். நாய் சேகர் ரிட்டனஸ் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்ட வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “