Advertisment

அண்ணா சீரியல் கொண்டாட்டம்... கார்த்திக் ராஜூவுக்கு விருது : ஜீ தமிழ் கோல்டன் மூமென்ட்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் வரவேற்பு கொடுத்த தருணங்களை கொண்டாடும் வகையில் கோல்டன் மூமென்ட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
கோல்டன் மூமென்ட்ஸ்

ஜீ தமிழ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியில் சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் வரவேற்பு கொடுத்த தருணங்களை கொண்டாடும் வகையில் கோல்டன் மூமென்ட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

Advertisment

இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மே தினத்தில் ஒளிபரப்பானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. முதல் பாகத்தில் பல அழகான தருணங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில் இரண்டாவது பாகத்தில் பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் போல்ட்நெஸ், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் ஆக்ஷன், இதயம் தொட்ட தொடர் என பல கேட்டகரியின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதயம் தொட்ட தொடராக அண்ணா சீரியல் கொண்டாடப்பட்டுள்ளது.

அடுத்து நடிகர் கார்த்திக் ராஜ்க்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை வைத்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் கார்த்திக் அதிரடி பதில் கொடுத்து ரசிகர்களை மகிழ வைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இப்படி பல அழகான தருணங்களுடன் ஒளிபரப்பாக உள்ள கோல்டன் மூமென்ட்ஸ் பார்ட் 2 நிகழ்ச்சி ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment