Advertisment
Presenting Partner
Desktop GIF

12 ஆயிரம் பேர் ஆடிஷன்... தேர்வானது எத்தனை பேர்? சரிகம நிகழ்ச்சியின் 4வது சீசன் புதிய அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள சரிகம நிகழ்ச்சியின் 4-வது சீசன் எப்போது தொடங்கும்?

author-image
WebDesk
New Update
Zee tamil Sarigama Show

சரிகமப நிகழ்ச்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. பல சாமானிய மக்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.

Advertisment

ராக்ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜுன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப அமைந்துள்ளது. இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் வரும் ஏப்ரல் 27-முதல் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஷ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,000 பேர் இந்த ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையானவர்களை போட்டியாளர்களை தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், இந்த முறை மலேஷியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர். 

பெயிண்டர், ஓலை பின்னுபவர், போஸ்ட் வுமன் என பல விதமான குடும்ப பின்புலங்களை கொண்டவர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு சரிகமப சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Reality Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment