ஜீ தமிழில் கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான சீரியல் அமுதாவும் அன்னலட்சுயும். சரியான படிக்க முடியாமல் போன நாயகி ஒரு வாத்தியாரை திருமணம் செய்துகொண்டு படிக்க முயற்சி செய்கிறார். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் வாத்தியார் வேலைக்கு படித்திருந்தாலும், பியூன் வேலை பார்க்கிறார் என்பது தெரியவருகிறது. இதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன் இந்த சீரியலில் லீடு கேரக்டரில் நடித்து வரும் நிலையில், ராஜ்ஸ்ரீ, அருண் பத்மநாபன், ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மித்ரன் அழகுவேல் எழுதிய இந்த தொடரை, ஜீவ ராஜன் இயக்கி வருகிறார். இந்த தொடர் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இதனிடையே இந்த தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வரும் வாரங்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த சீரியல் இதுவரை 180-க்கு மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil