Advertisment

470 எபிசோடுகளுடன் முடிவு... சீசன் 2 வருமா? எதிர்பார்ப்பில் ஜீ தமிழ் சீரியல்

கண்மணி மனோகரன் படிக்காத பெண் மற்றும் படித்த போலீஸ் அதிகாரி என 2 வேடங்களில் நடித்திருந்த இந்த சீரியல், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது

author-image
WebDesk
New Update
Amuthavum

அமுதாவும் அன்னலட்சுமியும்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

470 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் திடீரென முடிவுக்கு வந்துள்ளது அந்த சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீசன் 2 வருமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன் நாயகியாக நடித்து வெளியான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதா கேரக்டரில் இவர் நடித்திருந்த நிலையில், அன்னலட்சுமி கேரக்டரில பிரபல நடிகை ராஜஸ்ரீ நடித்திருந்தார். அருண் பத்மநாபன் இந்த சீரியலின் நாயகனாக நடித்திருந்தார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராஜ் கபூர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படிக்காததால் அவமானப்படும் நாயகி ஒரு படித்த வாத்தியாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் தான் பக்கத்து கிராமத்தில் பள்ளியில் வாத்தியாராக வேலை செய்வதாக கூறி தனது அம்மாவையே ஏமாற்றும், நாயகன், நாயகியை ஏமாற்றி திருமணம் செய்துகொள்கிறார்.

அதன்பிறகு உண்மை வெளியாகும்போது என்ன நடக்கிறது என்பது தான் இந்த சீரியலின் திரைக்கதை. இதில் கண்மணி மனோகரன்  படிக்காத பெண் மற்றும் படித்த போலீஸ் அதிகாரி என 2 வேடங்களில் நடித்திருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த ஜனவரி 20-ந்தேதி முடிவுக்கு வந்தது. இறுதியில் அமுதா படித்து பட்டம் பெற்ற நிலையில், செந்தில் வாத்தியார் வேலைக்கு செல்வதுடன் முடிவடைந்தது.

மொத்தமாக 470 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான இந்த சீரியல், ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. ஆனால் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த வாரம் திடீரென முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்த நிலையில், சீரியலின் சீசன் 2 வருமா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanmani Manoharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment