பேப்பரில் வந்த போட்டோ.. ஷண்முகம் குடும்பத்தை கலைக்க சபதம் எடுக்கும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டி மீட்டிங் கிளம்புவதை தடுக்க வெங்கடேஷ் பாத்ரூமுக்குள் சென்று தாமதப்படுத்திய நிலையில் இன்று, வெங்கடேஷ் பாத்ரூமுக்குள் காதல் பாட்டு பாடி கொண்டே தாமதப்படுத்த முத்துப்பாண்டி வேறு வழியின்றி குளிக்காமல் ட்ரெஸ் மாத்தி கொண்டு கிளம்புகிறான். அப்போது வெங்கடேஷ் வெளியே வந்து சாரி கேட்க முத்துப்பாண்டி குளிச்சி முடிச்சிட்டு எந்த வேலைக்கு போக போறீங்க என்று கோபப்பட்டு செல்கிறான்.
இதனால் சண்முகமும் பரணியும் வருத்தமடைகின்றனர், இசக்கி ரத்னாவிடம் சென்று எதுக்கு இவர் இப்படி பண்ணனும்? பொறுமையா குளிக்க வேண்டியது தானே.. அவர் தான் சீக்கிரம் போகணும்னு நேத்தே சொன்னாரே, வெங்கடேஷ் செய்யுறது எல்லாம் சரியா இல்ல என்று சொல்ல ரத்னா நான் அப்பவே அவரை உள்ளே விட வேண்டாம்னு சொன்னேன். நீங்க தான் யாரும் கேட்கல என்று சொல்கிறாள்.
வீட்டில் நடந்த இந்த பிரச்சனையால் வைகுண்டம் இனி எல்லாரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கலாம் என்று ஐடியா கொடுக்க ஷண்முகம் கொத்தனாரை வர வைத்து இன்னொரு பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்கிறான். அடுத்ததாக ஷண்முகம் குடும்பத்தை பேட்டி எடுத்தது பத்திரிக்கையில் வந்திருக்க சிவபாலன் இதை சௌந்தரபாண்டியிடம் காட்டி கடுப்பாக்குகிறான்.
அடுத்து பேப்பரை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு கிளம்ப சௌந்தரபாண்டி பேப்பர்ல வர அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டானா? அந்த குடும்பத்தை காலத்து காட்டுறேன் என்று சபதம் எடுக்கிறார். ஷண்முகம் குடும்பத்தினர் பேப்பரில் போட்டோ வந்து இருப்பதை பார்த்து சந்தோசப்பட ஷண்முகத்திற்குள் ஒரு வித பயம் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்தடை மாத்திரையால் மாட்டிக் கொள்ளும் மாயா.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம். இது சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கையில் எரிந்து போன போட்டோ கிடைத்த நிலையில் இன்று, அது மாயாவின் போட்டோ என அறியும் கார்த்திக் மாயா மீது மேலும் சந்தேகம் கொள்கிறான். மறுபக்கம் மாயா மகேஷிடம் கருத்தடை மாத்திரைகள் தீர்ந்து விட்டது. ஒழுங்கா ரேவதியை கல்யாணம் பண்ற வேலைய பாரு என எச்சரிக்கிறாள்.
அடுத்ததாக கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வீடு முழுவதும் நோட்டமிட கார்த்தி கையில் ஒரு மாத்திரை ஸ்ட்ரிப் கிடைக்கிறது. மெடிக்கல் ஷாப்புக்கு கொண்டு வந்து விசாரிக்கும் போது அது கருத்தடை மாத்திரை அட்டை என தெரிய வருகிறது. இந்த பக்கம் ரேவதிக்கு ஒரு போன் கால் பண்ற அவள் உடனே வருவதாக சொல்லி கிளம்பி செல்கிறாள்.
கார்த்திக்கிற்கு மாயாவை ஒரு முறை ஹாஸ்பிடலில் பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனால் அப்போது மாயா தலைவலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு வந்ததாக சொன்னதையும் கார்த்தி நினைத்து பார்க்கிறான். இதைத் தொடர்ந்து ரேவதி ஒரு ஆசிரமத்தில் கலந்து அங்கு தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதி பார்த்ததும் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறாள்.
இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல உன்ன என் கூடவே கூட்டிட்டு போயிட்டேன் என்று ரேவதி அந்த குழந்தைக்கு வாக்கு கொடுக்கிறாள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.