டாக்டரை சந்தித்த கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிப்பதற்காக ஜோதிடர் வீட்டுக்கு வர ரேவதி கார்த்தியிடம் சண்டையிட இன்று, சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். நான் என்ன மனநிலையில் இருக்கேன்.. இப்போ இதெல்லாம் தேவையா என கோபப்படுகிறாள்.
ஆனாலும் சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நேரம் குறிக்க சொல்லி விட்டு மயில் வாகனத்திடம் ஏற்பாடுகளை செய்ய சொல்கிறாள். மயில் வாகனம் பாட்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பாட்டி உடனடியாக தன்னை பார்க்க வர சொல்கிறாள். மறுபக்கம் கார்த்திக் நர்ஸ்ஸை சந்திக்க நர்ஸ் கல்யாணம் நடந்து முடிந்து விட்டதா? உடம்பு சரியில்லாமல் போகவே என்னால் வர முடியவில்லை என சொல்கிறாள்.
கார்த்திக் தன்னுடன் கல்யாணம் நடந்து முடிந்த விஷயத்தை சொல்லி ஒரு உதவி கேட்கிறான். இங்கே மயில் வாகனம் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வர அவர் பரம்பரை கட்டிலை கொடுத்து இதில் தான் முதலிரவு நடக்கணும் என சொல்கிறார். மேலும் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சேர்த்து சுண்ட காய்ச்சிய பாலையும் கொடுத்து அனுப்புகிறார்.
மயில் வாகனம் கட்டிலுடன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இதெல்லாம் எதுக்கு என கேட்க இது ரொம்ப பழமை வாய்ந்த கட்டில், இதில் வாழ்க்கையை தொடங்கினா அவங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் என சமாளிக்கிறான். அடுத்ததாக கார்த்திக் டாக்டரை சந்தித்து மகேஷ் குறித்து விசாரிக்க ஆமாம் அவனுக்கும் மாயாவுக்கும் தொடர்பு இருந்தது உண்மை தான் என சொல்கிறார். சாமுண்டீஸ்வரி தான் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறியதாகவும் சொல்கிறார்.
இதை கேட்டு கார்த்திக் அங்கிருந்து கிளம்பியதும் டாக்டர் மல்லிகா சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து கார்த்திக் வந்து சென்ற விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செயினை ஏமார்ந்து வீட்டிற்கு வந்த சண்முகம்.. நம்ப மறுக்கும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கிழிந்த சட்டையுடன் வர வீட்டில் எல்லாரும் அதிர்ச்சியான நிலையில் இன்று சண்முகம் வாங்கிய செயினை யாரோ கொள்ளையடித்து விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார். ஆனால் பரணி நீ யார் கூடவோ சண்டை போட்டு வந்திருக்க என சண்முகம் சொல்வதை ஏற்க மறுக்கிறாள்.
அடுத்த நாள் வீராவுக்கு சப் இன்ஸ்பெக்டராக வேலை சேர லெட்டர் வர வீட்டில் உள்ள எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இதையடுத்து சண்முகம் உனக்கு ஜெயின் வாங்கி தருவதாக சொல்ல பரணி சண்முகத்தை முறைக்க சண்முகம் பரணியை பார்க்கிறான். அடுத்து சண்முகமும் முத்துபாண்டியும் ஜெயின் எடுக்க கடைக்கு வர அதே ரவுடிகள் அதே கடைக்கு வருகின்றனர்.
சண்முகம் இதை பார்க்க முத்துப்பாண்டி நீ அவங்க மேல கையை வைக்காதே.. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை கையும் களவுமாக பிடிக்கிறான். அவர்களிடம் ஜெயினை வாங்குகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.