சமாதானம் பேச வந்த பாக்கியம்.. ஷாக் கொடுத்த இசக்கி, முத்துப்பாண்டி எடுத்த முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியின் முடிவால் முத்துப்பாண்டி கோபமாகி கிளம்பி சென்ற நிலையில் இன்று, பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியை அனுப்பி வைக்க சொல்ல சண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான், பாக்கியம் இசக்கியிடம் பேச அவளும் அண்ணன் முடிவு தான் என்னுடைய முடிவு என்று சொல்ல பாக்கியம் இது சரியில்ல என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.
அடுத்து பரணி முத்துபாண்டியை சந்திக்க வருகிறாள், அவனிடம் இசக்கியை விட்டுடாத, அவ மனசை மாற்ற வேண்டியது நீ தான் என்று சொல்ல முத்துப்பாண்டி இசக்கி விஷயமா பேச வராதே என்று கோபப்படுகிறான். மேலும் என்னால் அந்த வீட்டிற்கு எல்லாம் வந்து வாழ முடியாது என்று சொல்கிறான்.
பிறகு பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலனிடம் முத்துப்பாண்டி மற்றும் இசக்கியை எப்படியாவது சேர்த்து வைக்கணும்.. முத்துபாண்டியை வச்சி தான் இசக்கி மனசை மாற்ற முடியும், அதுக்கு முத்துபாண்டியை சம்மதிக்க வைக்கணும் என திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டேஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டேஸ்வரியின் துணியை பற்ற வைத்த நிலையில் இன்று, சாமுண்டேஸ்வரி பூஜையறைக்குள் இருக்க துணியை பற்ற வைத்த சகுந்தலா யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விடுகிறாள். ஏதோ கருகும் வாசனை வருவதை உணர்ந்த சாமுண்டீஸ்வரி ஒரு கட்டத்தில் தனது புடவை பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
சாமுண்டேஸ்வரி அலறி அடித்து சத்தம் போட சந்திரகலாவே ஓடி வந்து தீயை அணைத்து நல்லவள் வேஷம் போடுகிறாள். எனக்கு என்னமோ கார்த்திக் தம்பி வந்ததுக்கு அப்புறம் தான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு என்று சந்தேகமா இருக்கு என்று சொல்லி சாமுண்டேஸ்வரி மனதுக்குள் சந்தேகத்தை கிளப்ப முயற்சி செய்கிறாள். அடுத்து சந்திரகலா ஜோசியர் ஒருவரை பார்த்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி எல்லாத்துக்கும் காரணம் கார்த்திக் தான் என்று சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள்.
வீட்டிற்கு வந்ததும் மீண்டும் நடந்த விஷயங்களை சொல்கிறாள். வீட்டில் உள்ள எல்லாரும் கூடி நிற்கின்றனர். கார்த்திக் சாமுண்டீஸ்வரி பின்னாடி நிற்கிறான்.
ஜோசியக்காரர் உங்களை சுத்தி வஞ்சகம் நிறைந்து இருக்கு.. ஆனால் உங்களுக்கு பின்னாடியே உங்க காவல் தெய்வம் இருக்கு.. அதை மட்டும் விட்டுடாதீங்க, அந்த காவல் தெய்வம் இருக்கும் வரை உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது என்று சொல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள்.
அதன் பிறகு ஜோசியர் எல்லாருடைய ஜாதகத்தையும் வாங்கி பார்க்கிறார். ரேவதியின் ஜாதகத்தை பார்த்து விட்டு இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சா பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார். ஜோசியர் சொன்னதை கேட்ட ரேவதி அப்செட்டாகி உள்ளே சென்று விட ஸ்வேதாவை அனுப்பி ரேவதியை அழைத்து வர சொல்கிறாள் சாமுண்டேஸ்வரி. ரேவதியை சுவாதி வற்புறுத்தி அழைத்து வர ரேவதி டல்லாக இருப்பதை பார்த்த சாமுண்டேஸ்வரி என்னாச்சு என்று கேள்வி எழுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.