முதல் சந்திப்பிலேயே வந்த சந்தேகம்.. ரேவதியின் காதல் விஷயத்தில் கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கண்டிஷன் உடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நிலையில் இன்று, ரேவதி யாரோ ஒருவருக்கு போன் செய்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். அம்மா நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இதற்கிடையில் நம்மளுடைய கல்யாணத்துக்கான வேலைகளை கவனிக்கணும் என சொல்லி ஃபோனை வைக்கிறாள்.
அடுத்து பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு வந்து கார்த்தியின் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடர் ஒருவரிடம் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்க கார்த்திக் முதல் மனைவியை இழந்தவர் என்ற விஷயத்தை சரியாக சொல்லும் ஜோசியர் கூறிய விரைவில் ரத்த பந்தத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் இவருக்கு கல்யாணம் நடக்கும் என சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதை கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.
அதைத்தொடர்ந்து இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி கார்த்தியுடன் கிளம்பி தன்னுடைய காதலன் மகேசை பார்க்க வருகிறாள். வரும் வழியில் கார்த்தியிடம் சண்முகம் என்பவர் எங்க வயல் காட்டில் வேலை செய்து வந்தார். திடீரென அவர் இறந்துவிட ஊர் முழுக்க அவரது இறப்புக்கு காரணம் எங்க அம்மா தான் என பேச தொடங்கிட்டாங்க. அதனால நான் அவங்களோட குடும்பத்துக்கு உதவ முடிவெடுத்தேன்.
அவருடைய மனைவி மாயாவும் தம்பி மகோஷூம் இருக்கிறார்கள். மகேஷ் கல்லூரி படிக்க நான்தான் பணம் கொடுத்து உதவினேன். பிறகு அவரை எனக்கு பிடித்து போய் காதலிக்க தொடங்கிட்டேன் என்று சொல்கிறாள். சண்முகம் வீட்டிற்கு வர மாயா இவர்களை வரவேற்கிறாள். அடுத்து மகேஷ் அப்பாவி போல் வந்து நிற்க கார்த்திக் அவனை பார்த்து ஷாக் ஆகிறான். மாயா மகேஷ் யார்கிட்டயும் அதிகம் பேசாம அவங்க உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் என அறிமுகம் செய்கிறாள்.
பிறகு கார்த்திக் மகேஷின் போட்டோவை வாங்கிக் கொண்டு வெளியே வருகிறான். ரேவதி வெளியே வந்ததும் உண்மையாகவே இவன புடிச்சு போய் தான் காதலிச்சியா? இல்ல பாவப்பட்டு காதலிச்சியா என கேட்க ரேவதி அதற்கு சரியாக பதில் தெரியவில்லை என சொல்கிறாள். அதைத்தொடர்ந்து சண்முகம் வீட்டில் மாயா திடீரென வாந்தி எடுக்க மகேஷ் பாவமாக வந்து நின்ற தன்னுடைய கெட்டப்பை அப்படியே முழுசாக மாற்றி வில்ல தனத்தோடு பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போலீஸ் ஆக போகும் வீரா.. முத்துப்பாண்டியின் உதவியை நாடிய சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் ஊர் ஆட்களை வைத்து வெங்கடேசை ஓட விட்டு ஸ்கூலை மீண்டும் ரத்னாவிடம் ஒப்படைத்த நிலையில் இன்று, வீரா போலீசாக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது போலீஸ் ட்ரைனிங்கில் பங்கேற்பதற்காக லெட்டர் வீட்டிற்கு வருகிறது.
இந்த லெட்டரால் மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் வீரா போலீஸ் ப்ராக்டிஸில் கலந்துகொள்ள லோக்கல் இன்ஸ்பெக்டரின் கையெழுத்து தேவை என தெரியவர முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது. சண்முகம் அவன் கையெழுத்து போடலனா என்ன நாம டிஜிபிஐ சந்தித்து கையெழுத்து வாங்கிக்கலாம் என்று சொல்கிறான்
இதை கேட்ட பரணி நீ எங்க போனாலும் கடைசியில் முத்துப்பாண்டி தான் கையெழுத்து போடணும். முதல்ல அவன் கிட்ட போய் பேசு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று சொல்கிறாள். நேராக சண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து வீராவுக்கு கையெழுத்து பாட சொல்லி கேட்க முத்துப்பாண்டி கேட்டதெல்லாம் கையெழுத்து போட முடியாது அதுக்குன்னு முறை இருக்கு என சொல்லி விட சண்முகம் என் மேல இருக்க கோபத்தில் என் தங்கச்சியோட கனவை அழிச்சிடாத என சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.
வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறான். அவன் மட்டும் கையெழுத்து போடாம போகட்டும் அதுக்கப்புறம் இருக்கு என ஆவேசப்பட்டு வெளிய கிளம்புகிறான். அதன் பிறகு வீரா முத்துப்பாண்டி கையெழுத்து போடுவானா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்க பரணி உனக்கு முத்துப்பாண்டி கையெழுத்து போடணும் அவ்வளவுதானே அதற்கு நான் சொல்ற மாதிரி செய்யணும் என ஐடியா ஒன்றை கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.