கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியின் நிச்சயதார்த்தத்துக்கான வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர எல்லா வேலைகளும் பக்காவாக நடக்க அதை பார்த்து ஆச்சரியமடைகிறாள். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெரியவரிடம் எல்லா வேலைகளும் சரியா போகுது என்று விசாரிக்க எல்லாம் நல்லபடியாக போகுது உங்க ட்ரைவர் வீட்டில் ஒருத்தர் மாதிரி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யுறாரு என்று என்று பெருமையாக சொல்கின்றனர்.
மறுபக்கம் கார்த்தியின் பாட்டி முருகனிடம் என்ன முருகா இது? ரேவதிக்கும் என் பேரனுக்கும் கல்யாணம் நடக்கும்னு ஆசையா இருந்தேன்.. சித்தரும் அப்படி தான் சொன்னாரு.. ஆனால் இப்போ ரேவதிக்கு வேறொருத்தனோடு நிச்சயதார்த்தம் நடக்க போகுதுனு சொல்றாங்க, இதெல்லாம் நீ பார்த்துட்டு சும்மாவா இருக்க என்று புலம்புகிறாள்.
உடனே எதிரில் குழந்தை ரூபத்தில் தோன்றிய முருகன் உனக்கு என்ன தான் பாட்டி பிரச்சனை? எதுக்கு ஓயாமல் என்னை திட்டிகிட்டே இருக்க என்று கேட்க பரமேஸ்வரி பாட்டி மீண்டும் புலம்புகிறாள். முருகன் கண்டிப்பாக கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணமா நடக்கும். இதெல்லாம் என் சித்து விளையாட்டு. நீ நினைக்கிறது எல்லாத்தையும் உடனே நடத்தி வச்சிட்டா என்னை மறந்துட மாட்டியா என்று பதில் சொல்கிறார்.
மேலும் நீ கல்யாணத்துக்கு போ எனவும் சொல்லி முருகன் அங்கிருந்து மறைகிறான். மறுபக்கம் மகேஷ் மற்றும் மாயா என இருவரும் ஆட்டோவில் வந்து இறங்க அவர்களை வரவேற்கும் சாமுண்டீஸ்வரி சொல்லி இருந்தா கார் அனுப்பி இருப்பேனே என்று சொல்கிறாள். எல்லாரும் கழுத்து நிறைய நகைகளுடன் இருக்க ஒன்றும் இல்லாமல் இருக்கும் மாயா முகம் டல்லாகிறது.
இதை கவனித்த மகேஷ் என்னாச்சு என்று விசாரித்து பிறகு ரேவதியை சந்தித்து விஷயத்தை சொல்ல அவள் தன்னுடைய நகைகளை கொடுத்து போட்டு கொள்ள சொல்கிறாள். ஸ்வாதியும் போட்டுக்கோங்க.. நாங்க உங்களை பிரித்து எல்லாம் பார்க்க மாட்டோம் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடை திறக்கும் இசக்கி.. கண் கலங்கிய சண்முகம், கோர்த்து விட்ட சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கடை திறக்க போவதாக சொல்லி மளிகை சாமான்களுடன் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, இசக்கியின் இந்த முடிவுக்கு காரணம் சண்முகம் தான் என்ற விஷயம் பரணிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து பரணி பாக்கியத்துக்கு போன் செய்து இசக்கி கடை திறக்க போகும் விஷயத்தை சொல்கிறாள்.
இப்படியே விட்டா இசக்கி இங்கேயே இருந்துடுவா.. முத்துபாண்டியை வந்து பேசி சமாதானம் செய்ய வச்சு அவளை வீட்டிற்கு கூட்டி போற மாதிரி பண்ணுங்க என்று சொல்ல பாக்கியம் பரணி பேசி கொள்வதை சௌந்தரபாண்டி பார்த்து விடுகிறார், இதை வைத்து பிரச்னையை செய்ய திட்டம் போடுகிறார். இங்கே இசக்கி கடை திறக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்க பரணியும் வைகுண்டமும் முழு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.
கடை திறக்கும் பூஜையில் ஒரு முருகன் போட்டோவை கொண்டு வந்து வைக்க உள்ளே போன இசக்கி சண்முகம் போட்டோவை கொண்டு வந்து வைக்கிறாள். எனக்கு என் அண்ணன் தான் முருகன்.. அவர் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல சண்முகம் எமோஷனாகிறான். அடுத்து வீட்டில் முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி கொண்டிருக்க அங்கு வரும் சௌந்தரபாண்டி நீ என்ன வேலைக்கு போற.. வர.. தூங்குற அங்க உன் பொண்டாட்டி கடை திறக்க போறா என்று கோர்த்து விடுகிறார்.
முத்துப்பாண்டி தெரியும்.. அவ முன்னேற கடை திறக்கிறா என்று இசக்கியை விட்டு கொடுக்காமல் பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.