கடத்தப்பட்ட மகேஷ்.. ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் மாயா சிசிடிவி ஆதாரங்களை அழித்த நிலையில் இன்று, கார்த்திக் உள்ளே வந்து பார்க்க ஆதாரங்கள் அனைத்தும் தீயில் எரிய இதற்கெல்லாம் பின்னாடி யாரோ ஒருவர் இருக்கிறார் என சந்தேகப்படுகிறான். வேறு வழியில் உண்மையை கண்டுபிடிக்கலாம் என திட்டம் போடுகிறான்.
இதை தொடர்ந்து நிச்சயதார்த்தத்திற்காக ரேவதி ஒரு பக்கம் மகேஷ் ஒரு பக்கம் என ரெடியாகி கொண்டிருக்க பரமேஸ்வரி பாட்டி ரேவதி நிச்சயதார்த்தத்திற்கு நான் கொண்டு வந்த புடவையை தான் கட்டிக்கிட்டு மணமேடை ஏறணும். முருகா அதுக்கு நீ தான் ஒரு வழி பண்ணனும் என வேண்ட முருகன் என்ன பாட்டி எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுவியா? புடவையை மாற்றி வை, நீ யோசிச்சு ஏதாவது செய்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்கிறான்.
அதேபோல் பரமேஸ்வரி பாட்டி யாருக்கும் தெரியாமல் புடவையை மாற்றி வைத்து விடுகிறார். பிறகு ரேவதி புடவையை கட்டுவதற்காக எடுக்க புடவை மாறி இருப்பதை பார்த்து குழப்பம் அடைகிறார். இதுதான் கட்டிக்கிட்டு மணமேடைக்கு போகணும் போல என நினைத்து புடவையை கட்டி கொள்கிறாள். மறுபக்கம் மகேஷ் ரூமில் ரெடியாகி கொண்டிருக்க சந்திரகலா அவனை தலையில் அடித்து மயங்க வைக்கிறாள்.
பிறகு சிவனாண்டி ஆட்கள் அவனை கடத்தி செல்கின்றனர். இங்கே ரேவதி நிச்சயத்துக்கு ரெடி ஆகி மணமேடை ஏற அவள் கட்டியிருக்கும் புடவையை பார்த்து எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். சாமுண்டீஸ்வரியும் குழப்பம் அடைகிறாள். பிறகு மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்து வர சொல்ல மகேஷ் காணவில்லை என்பது தெரியவந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சாமுண்டீஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் சிவனாண்டி தான் என நினைத்து அவன் சட்டையை பிடித்து சத்தம் போட சிவனாண்டி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கதான் இருக்கேன் என சொல்ல சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு மகேஷை தேட சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரணியை சந்தித்த வெங்கடேஷ்.. முத்துப்பாண்டிக்கு சண்முகம் கொடுத்த வார்னிங் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் வெங்கடேஷ் பரணியை பார்க்க கிளினிக் வந்த நிலையில் இன்று, வெங்கடேஷ் பரணியை சந்தித்து நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்னை எப்படியாவது ரத்னாவோட பேச வையுங்க என்று சொல்லி கேட்க பரணி நீ பண்ணது மன்னிக்கவே முடியாத தப்பு என திட்டி துரத்தி விடுகிறாள்.
இதை தூரத்திலிருந்து சண்முகம் பார்த்து விட இவன் எதுக்கு இங்க வந்துட்டு போறான் என சந்தேகம் அடைகிறான். மறுபக்கம் முத்துப்பாண்டி இசக்கியின் மளிகை கடைக்கு வந்து அவளிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க வீட்டுக்கு திரும்பி வந்த சண்முகம் இதை பார்த்து விடுகிறான். ஒன்னு வீட்டுக்கு வந்து பேசுங்க இப்படி வெளியில நின்னு என் தங்கச்சியை சைட் அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறான்.
இதை கேட்டு முத்துப்பாண்டி கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான். இதனால் இங்கே இசக்கி சாப்பிடாமல் வருத்தத்தில் இருக்க அதேபோல் அங்கே முத்துப்பாண்டியும் பீலிங்கில் இருக்கிறான். பிறகு சண்முகம் ரூமுக்கு வந்து நீ என்கிட்ட நேர்மையா இல்ல.. அந்த வெங்கடேஷ் எதுக்கு உன்ன பார்க்க கிளினிக் வந்தான் நீ எதுக்கு என்கிட்ட அதை பத்தி சொல்லல என்று கேள்வி கேட்கிறான். பரணி அவன் வந்துட்டு போனதை நீ பார்த்ததை நான் பார்த்தேன். நீ இதை அங்கேயே கேட்டிருக்கலாம். ஏன் கேட்கல? நீதான் என்கிட்ட நேர்மையா இல்ல என பதிலடி கொடுக்கிறாள்.
இருவருக்கும் ஏற்படும் இந்த வாக்குவாதம் கடைசியில் ரொமான்ஸாக மாறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.