சௌந்தரபாண்டியின் நாடகத்தால் வில்லனாகும் சண்முகம்.. இசக்கி வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி இசக்கியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல டிராமா போட்ட நிலையில் இன்று, வீட்டுக்கு வந்த சௌந்தரபாண்டி தன்னுடைய குடும்பத்தாரிடம் இசக்கி காலில் விழுந்து வீட்டுக்கு கூப்பிட்டதாக சொல்ல பாக்கியம், சிவபாலன் ஆகியோர் அதை நம்ப மறுக்கின்றனர். சௌந்தரபாண்டி உங்களுக்கு சந்தேகமா இருந்தா பரணிக்கு போன் போட்டு கேட்டுக்கங்க என்று சொல்ல பாக்கியம் பரணிக்கு ஃபோன் போடுகிறாள்.
பரணியும் ஆமா அப்பா வந்து மன்னிப்பு கேட்டார் ஆனால் இந்த சண்முகம் தான் மாறுகிற மாதிரி இல்ல என்று சொல்கிறாள். பரணி சொல்வதைக் கேட்டு பாக்கியம், சிவபாலன் ஆகியோரும் சௌந்தரபாண்டியின் நாடகத்தை நம்பி விடுகின்றனர். அடுத்ததாக முத்துப்பாண்டி முப்பிடாதியிடம் ஏன் இந்த சண்முகம் இப்படி இருக்கான் என வருத்தப்பட்டு பேசுகிறான். முப்பிடாதி இசக்கிக்கு உங்களோட சேர்ந்து வாழணும்னு ஆசைதான். ஆனா அண்ணனை மீறி முடிவெடுக்க முடியாமல் இருக்காங்க நீங்க இன்னொரு முறை போய் பேசிப் பாருங்க என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து மீண்டும் இசக்கி சந்தித்து நான் திரும்பத் திரும்ப உன்னை தேடி வந்து சேர்ந்து வாழலாம்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன் இது தான் கடைசி முறை உன்னுடைய முடிவை உறுதியா சொல்லிடு என்று சொல்ல இந்த முறையும் இசக்கி அண்ணனோட முடிவு தான் என்னுடைய முடிவு என்று சொல்கிறாள். இதனால் முத்துப்பாண்டி இனிமே உன்ன தேடி வரமாட்டேன் என கோபமாக அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
அடுத்ததாக பரணி மற்றும் சண்முகம் இருவரும் தனியாக பேசுவது ஒரு ஆம்பள இன்னமும் கீழே இறங்கி வர மாட்டான் என்று சொல்ல சண்முகம் என் முடிவில் இருந்து மாற மாட்டேன் என்று பதில் கொடுக்கிறான். பரணி நீ எடுக்கிற முடிவு இசக்கி கிட்ட கேட்டு எடு என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி, நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி மகேஷை ரிலீஸ் செய்த நிலையில் இன்று, சிவனாண்டி மகேஷிடம் நீ அந்த சாமுண்டீஸ்வரி வீட்ல இருக்கணும்.. இப்போ நிச்சயதார்த்தத்துக்கு போய் போன் பேச போயிருந்தேன் அங்க மயங்கி விழுந்துட்டேன் என்று சொல்லு என சொல்கிறான். உடனே மாயா மயங்கி விழுந்ததற்கு காரணம் கார்த்திக் தான் என்று அவன் மீது பழி போட சொல்கிறாள்.
கார்த்திக் நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டான். அவனை அந்த வீட்ல இருந்து விரட்டணும் என சொல்கிறாள். அதைத் தொடர்ந்து மாயா மற்றும் மகிழ்ச்சி என இருவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். போன் பேச போயிருந்த இடத்தில் கார்த்திக் தன்னை மயங்க வைத்து விட்டதாக சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே நேரத்தில் சந்திரகலா எதுக்கு இப்படி சொல்கிறான் என குழப்பம் அடைகிறாள்.
அடுத்து சாமுண்டீஸ்வரி மகேஷ் சொன்னதைக் கேட்டு கார்த்திக்கிடம் கோபப்படுகிறாள். ஆனால் ரேவதி கார்த்திக் அப்படி செய்யற ஆள் கிடையாது என அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். இருந்தாலும் சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள். ஆனால் கார்த்திக் தீர விசாரிக்காமல் இப்படி முடிவெடுக்காதீங்க என சொல்வதோடு உண்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்கிறான்.
சாமுண்டீஸ்வரி ஒரு மாசம் அவகாசம் கொடுக்கிறாள். ஒரு மாசத்துக்குள் உண்மையை நிரூபிக்க தவறினால் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டிஷன் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.