சாமுண்டீஸ்வரியை சந்தித்த பரமேஸ்வரி.. கார்த்தியின் வார்த்தையால் ராஜராஜனுக்கு கிடைத்த தண்டனை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சாப்பிடும் போது விக்கல் ஏற்பட கார்த்திக் உங்க அப்பா அம்மா நினைக்கிறாங்க போல என்று சொல்லிய நிலையில் இன்று, கார்த்திக் சொன்னதை கேட்டு முறைக்கும் சாமுண்டீஸ்வரி இன்னமும் உங்க அப்பா அம்மாவை நினைச்சிட்டு தான் இருக்கீங்களா என்று கேட்க, அதெப்படி மறக்க முடியும் என்று ராஜராஜன் சொல்ல சாமுண்டீஸ்வரி மேலும் கோபமடைகிறாள்.
அதுமட்டுமின்றி நீங்க இப்படி சொன்னதால் தண்டனையா நீங்க காளி கோவிலுக்கு வர கூடாது. நான் மட்டும் போயிட்டு வரேன் என்று சொல்கிறாள். பிள்ளைகள் எல்லாரும் சாமுண்டீஸ்வரியிடம் ராஜராஜனுக்காக பேச சாமுண்டேஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். கார்த்திக் பாட்டியை காளி கோவிலுக்கு வர சொல்லி இருந்த நிலையில் ராஜராஜன் வராத காரணத்தால் வர வேண்டாம் என்று சொல்ல போன் செய்ய போன் ரீச் ஆகவில்லை.
காருக்குள் அமர்ந்த சாமுண்டீஸ்வரி சீக்கிரம் வர சொல்லி கார்த்திக்க்கு போன் செய்கிறாள். இங்கே பரமேஸ்வரி பாட்டி காளி கோவிலுக்கு வந்து காத்திருக்க கார்த்திக் மற்றும் சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு வருகின்றனர், ராஜராஜன் வராததை பார்த்து பாட்டி ஷாக் ஆகிறாள். பிறகு கார்த்திக் பாட்டியை தனியாக சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல என் பையனை என்னால் பார்க்கவே முடியாதா என்று வருந்துகிறாள்.
நான் நேரடியா போய் சாமுண்டீஸ்வரியிடமே கேட்கிறேன் என்று கிளம்பி வர கார்த்திக் தடுக்க முயற்சி செய்தும் பாட்டி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என் பையனை பார்க்கணும் என்று சொல்கிறாள். என் அம்மாவோட சாவுக்கு உங்க புருஷன் தான் காரணம். அதுக்கு தண்டனையா நீங்க கடைசி வரைக்கும் உங்க பையனை பார்க்க முடியாது. பார்க்க விட மாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இசக்கியை கூப்பிட வந்த முத்துப்பாண்டி.. ஷண்முகம் எடுக்க போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா. சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்து சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நிலையில் இன்று, முத்துப்பாண்டி இசக்கியை கூட்டிட்டு வர ஷண்முகம் வீட்டிற்கு கிளம்பி வர இங்கே பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் சௌந்தரபாண்டியை கலாய்த்து விடுகின்றனர். உங்க பையன் வந்தான் கிழிச்சிடுவானு சொன்னீங்க.. இப்போ உங்களை தானே கிழிச்சி தொங்க விட்டுட்டான் என்று கலாய்க்கின்றனர்.
அதை தொடர்ந்து பாக்கியம் பரணிக்கு போன் போட பரணி போனை ஸ்பீக்கரில் போட்டு பேச இசக்கி அத்தை என்று குரல் கொடுக்க பாக்கியம் யார் அது எனக்கு காது கேட்கல என்று சொல்ல இசக்கி திரும்பவும் என்ன அத்தை ரெண்டு நாள்ல என்னை மறந்துடீங்களா என்று கேள்வி கேட்கிறாள். பாக்கியம் என் பேச்சை கேட்காதவ கிட்ட எல்லாம் நான் பேச மாட்டேன் என்று சொல்ல இசக்கி இது தான் மாமியார் குசும்பா சரி நீங்க பேச வேண்டாம் என்று சொல்லி விட பரணி ஸ்பீக்கரை ஆப் செய்து விடுகிறாள்.
அடுத்து முத்துப்பாண்டி திரும்பி வந்ததையும் சௌந்தரபாண்டியை மிரள விட்ட விஷயத்தையும் சொல்ல பரணி ஆச்சரியப்பட்டு பேச இசக்கி என்ன பேசுறாங்க என்று தெரியாமல் தவிக்கிறாள். பிறகு முத்துப்பாண்டி வந்த விஷயம் அறிந்து சந்தோசப்படுகிறாள். அதோடு முத்துப்பாண்டி இங்கே தான் வாரான் துன்று தெரிந்ததும் இன்னும் ஆவலாகிறாள். உடனே ரூமுக்கு போய் இந்த புடவை கட்டிக்கவா? அந்த புடவை கட்டிக்கவா? என்று ஆசையாக ரெடியாகிறாள்.
சண்முகத்திற்கும் போன் போட்டு முத்துப்பாண்டி வீட்டிற்கு வரும் விஷயத்தையும் வீட்டில் நடந்த விஷயத்தையும் சொல்கிறாள். வீட்டிற்கு வரும் ஷண்முகம் முத்துப்பாண்டி நடந்துக்கிட்டது சரி தான் என்று பேச சண்முகம் இசக்கியை முத்துபாண்டியுடன் அனுப்பி விடுவானோ என்று பரணி நம்ப தொடங்குகிறாள். அடுத்து முத்துப்பாண்டி வீட்டிற்கு வர ஷண்முகம் அவனை வரவேற்க இசக்கி மற்றும் முத்துப்பாண்டி என இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு காதலுடன் பார்த்துக் கொள்கின்றனர்.
சண்முகம் முதல்ல சாப்பிடுங்க என்று முத்துபாண்டியை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற சொல்கிறான். முத்துப்பாண்டி இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்கிறான். இந்த நேரத்தில் ஷண்முகம் எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.