இசக்கியுடன் வாழ சண்முகம் போட்ட கண்டிஷன்.. முத்துப்பாண்டி எடுக்க போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டி இசக்கியை அழைத்து செல்வதற்காக ஷண்முகம் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, முத்துபாண்டியை வீட்டிற்குள் அழைத்து நல்லபடியாக நலன் விசாரித்து விதவிதமாக கறி விருந்து செய்து அவனை சாப்பிட வைத்து அவனை பற்றி பெருமையாக பேசுகின்றனர். ட்ரைனிங் சென்று வந்ததை பற்றியும் பாராட்டி பேசுகின்றனர்.
இதனை தொடர்ந்து முத்துப்பாண்டி இசக்கியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல ஷண்முகம் அந்த வீட்டிற்கு அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவிக்கிறான். இதனால் ஷண்முகம் மற்றும் முத்துப்பாண்டி இடையே வாக்குவாதம் உருவாகிறது. பரணி முத்துபாண்டிக்கு ஆதரவாக பேச வைகுண்டமும் ஓரளவிற்கு முத்துபாண்டிக்கு சப்போர்ட் செய்கிறார்.
இந்த வாக்குவாதத்தில் முத்துப்பாண்டி அது நான் இல்லாத போது நடந்தது, இசக்கியை நான் நல்லபடியா பார்த்துப்பேன் என்று சொல்கிறான்.
ஷண்முகம் 24 மணி நேரமும் உன்னால காவல் காக்க முடியுமா? நீ என் தங்கச்சியை பார்பியா? இன்ஸ்பெக்டர் வேலையை பார்பியா? என்று கேள்வி கேட்கிறான். மேலும் அன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தீக்குச்சியை உரசி இருந்தா இன்னைக்கு என் தங்கச்சி உயிரோடவே இருந்திருக்க மாட்டா என்று ஆவேசப்படுகிறான். மேலும் நான் உன்னை என் தங்கச்சியோட வாழ வேண்டாம்னு சொல்லல, அந்த வீட்டில் வேண்டாம். என் தங்கச்சி வேணும்னா இந்த வீட்டில் வந்து வாழு என்று சொல்கிறான்.
முத்துபாண்டி இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்தியின் மீது திரும்பிய சந்தேகம்.. கெடு வைத்த சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் காளி கோவிலுக்கு வந்த பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என் பையனை பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்ட நிலையில் இன்று, பரமேஸ்வரி பாட்டி பையனை பார்க்கணும் என்று சொன்னதும் சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்கிறாள். உங்க பையனை நீங்க பார்த்து 28 வருஷம் ஆச்சு.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களால் உங்க பையனை பார்க்கவே முடியாது என்று மறுக்கிறாள்.
இதனால் பரமேஸ்வரி பாட்டி ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி காரில் வந்து கொண்டிருக்கும் போது கார்த்திக் பாதி வழியில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நிற்கிறான். வெளியே வந்த சாமுண்டீஸ்வரி இப்போ எதுக்கு காரை நிறுத்தின? யாரை கேட்டு காரை நிறுத்தின என்று கோபப்படுகிறாள். கார்த்திக் என்ன தான் இருந்தாலும் கோவிலில் அந்த பாட்டி கிட்ட நீங்க அப்படி பேசி இருக்க கூடாது..
அவங்க வயசில எவ்வளவு பெரியவங்க என்று கேட்க சாமுண்டேஸ்வரி இதையெல்லாம் கேட்க நீ யார் என்று கேட்க நான் உங்களை பலமுறை காப்பாற்றி இருக்கேன், அந்த உரிமையில் தான் கேட்கிறேன் என்று சொல்கிறாள். எனக்கு ஆம்பளைங்க என்றாலே சுத்தமா பிடிக்காது. நீ என் பொண்ணுங்க கிட்ட நடந்த விதத்தை வச்சி தான் உன்னை என் வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டேன்.
இன்னும் 1 நிமிஷத்துல நீ காரை எடுக்கணும்.. இல்லனா நான் காரை ஸ்டார்ட் பண்ணி போயிட்டே இருப்பேன் என்று சொல்ல கார்த்திக் குடும்பத்தை சேர்க்க வேண்டும் என்பதால் காரை எடுக்கிறான். கோபமாக வீட்டிற்கு வரும் சாமுண்டேஸ்வரி கோவிலில் நடந்ததை சொல்ல ராஜராஜன் அம்மா வந்தாங்களா என்று கேட்கிறார். சாமுண்டேஸ்வரி நீங்க தான் வர சொன்னீங்களா என்று கேட்க அவர் இல்லை என்று சொல்ல மயில் வாகனம் மீது சந்தேகப்பட அவனும் இல்லை என்று சொல்கிறான். இந்த சமயத்தில் சந்திரகலா கார்த்திக் மீது சந்தேகத்தை கிளப்ப கார்த்திக் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல சாமுண்டீஸ்வரியின் மகள்களும் கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர்.
சாமுண்டீஸ்வரி உள்ளே சென்றதும் சந்திரகலா மைண்ட் வாய்ஸ் உடன் கார்த்திக்கை பார்க்க அவன் உங்களுக்கு சந்தேகமா இருந்தா நேரடியாக என்கிட்ட கேளுங்க.. இல்ல போலீசில் கம்பளைண்ட் கொடுங்க என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.