அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி அபிராமியை பார்க்க வேண்டும் என சொல்லி கார்த்தி உடன் கிளம்பிய நிலையில் அபிராமி ரேஷன் கடைக்கு வர சொல்லி இருந்தார். இந்த நிலையில் இன்று, அபிராமி ஏழை போல கெட்டப் போட்டு ரேஷன் கடையில் காத்துக் கொண்டிருக்க ரேஷன் கடையில் வேலை செய்யும் பெண்மணி லைன்ல வாமா என்று சத்தம் போடுகிறார்.
அபிராமி நான் பொருள் வாங்க வரல என்று சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருக்க கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் அங்கு வருகின்றனர். அபிராமியை பார்த்த ரேவதி நீங்கள் இங்கதான் பொருள் வாங்குவீங்களா என்று கேட்க ஆமா எங்களால அரிசி காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாது. இங்க தான் வாங்குவோம் என்று சொல்கிறாள்.
பிறகு ரேவதி அபிராமிக்காக வாங்கி வந்த புடவையை கொடுக்கிறாள். உங்கள பாத்தா எனக்கு வெளி ஆள் மாதிரியே தெரியல அத்தை என்று கட்டியணைத்துக் கொள்ள அபிராமி சந்தோஷப்படுகிறாள். அதன்பிறகு கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வாங்க உங்க பையன் சந்திக்கலாம் என்று சொல்கிறான். பரமேஸ்வரி பாட்டியும் கண்டிப்பாக வருவதாக சொல்கிறாள்.
மேலும் கார்த்திக் சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கதையை சொன்னாங்க நீங்க அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி இத்தனை வயசுக்கப்புறம் எனக்கு மன்னிப்பு கேட்கிறதுல எந்த கவலையும் இல்ல நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி, ராஜராஜன் என எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராஜராஜனுக்கு விக்கல் ஏற்படுகிறது.
கார்த்திக் உங்க அம்மா நினைக்கிறாங்க போல என்று சொன்னதும் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை முறைக்கிறாள். உடனே கார்த்திக் பார்த்து பல வருஷம் ஆகுது இல்லையா நினைக்காம எப்படி இருப்பாங்க என்று சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முத்துபாண்டியின் என்ட்ரி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் அழைத்து சென்ற நிலையில் இன்று, சௌந்தரபாண்டி குடும்பத்தார் முத்துப்பாண்டி ட்ரைனிங் முடிந்து திரும்பி வருவதால் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ஒரு பக்கமும் சிவபாலன் மற்றும் பாக்கியம் ஆகியோர் இன்னொரு பக்கமும் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
என் புள்ள வரான் அவனை வச்சி அந்த சண்முகத்தை அழிக்கிறான் என்று ஆவலுடன் இருக்கிறார் சௌந்திரபாண்டி, பாக்கியம் முத்துப்பாண்டி இசக்கி வீட்டை விட்டு போனதால் கோபமா தான்இருப்பான். அதனால் அவன் அப்படியே உங்க அப்பா பக்கம் சாய்ந்திட கூடாது என்று சொல்லி கொண்டிருக்க முத்துப்பாண்டி என்ட்ரி கொடுக்கிறான். பாக்கியம் அவனுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து வர செல்ல சௌந்தரபாண்டி ஓடி வந்து ஆரத்தி தட்டை பிடிங்கி ஆரத்தி எடுத்து முத்துபாண்டியை வாடா மகனே என்று வீட்டிற்குள் அழைத்து வருகிறாள்.
வீட்டிற்குள் வந்த முத்துப்பாண்டி நான் ஊருக்குள்ள வந்ததும் சில விஷயங்களை கேள்வி பட்டேன். ஒரு ரெண்டு பேரை சும்மா விட கூடாது என்று சொல்ல சௌந்தரபாண்டி யாரு அந்த சண்முகத்தையும் இசக்கியையும் தானே என்று கேள்வி கேட்கிறார். முத்துப்பாண்டி முப்பிடாதியிடம் நான் சொல்றதை அப்படியே எழுதிக்க என்று ரெண்டு பேர் மேலே சீம எண்ணையை ஊற்றினான், விளக்கை கொளுத்த அப்படியே அவங்க ரெண்டு பேர் தீ பிடித்து எறிந்தாங்க என்று சொல்லி சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா மீது எண்ணெய்யை வீட்டில் விளக்கேற்றுகிறான்.
நான் இல்லாத போது என் பொண்டாட்டி கிட்ட அப்படி நடந்துக்கிட்டது தப்பு என்று சொல்லி மிரட்டி விடுகிறான். பாக்கியம் இசக்கி இப்போ சண்முகம் வீட்டில் தான் இருக்கா.. நீ கூப்பிட்டா வருவா என்று சொல்ல முத்துப்பாண்டி நான் போய் கூப்பிடுறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.