Advertisment

பொய் வழக்கு... பெண் கடத்தல்... போலீஸ் செய்யுற வேலையா இது? தடுமாறும் அண்ணா

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil anna KD

அண்ணா - கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணாசீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

செல்பி பாட்டி போட்ட பிளான்.. வேலை செய்ததா வயகரா மாத்திரை? –

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்பி பாட்டி வைத்த போட்டியில் தீபா ஜெயித்ததை தொடர்ந்து இன்று, செல்பி பாட்டி மீனாட்சியுடன் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது என்ன மீனாட்சி புருஷன் ஊர்ல இருந்து வந்திருக்கான், விஷேஷம் ஏதும் இல்லையா என்று கேட்க, மீனாட்சி இப்போ தானே வந்து இருக்காரு இதுக்கு அப்புறம் தான் பேசணும் என்று சொல்கிறாள்.

அதன்பிறகு கார்த்திக், தீபாவுக்கு எதுவும் விஷேஷம் இல்லையா என்று கேட்க, கார்த்திக் மற்றும் தீபா இருவரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் தீபா திடீரென ஓடி போய் வாந்தி எடுக்க, செல்பி பாட்டி உண்மையாகவே தீபாவுக்கு விஷேஷம் தான் போல என்று கேட்கிறார். அதற்கு மீனாட்சி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, இன்னும் அவர்களுக்குள் நடக்க வேண்டியது எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறாள்.

உடனே செல்பி பாட்டி அதான் ஸிண்டாக் இருக்கே, அதை பாலில் கலந்து கொடுத்து விட்டால் நடக்க வேண்டியது எல்லாம் தானா நடக்கும் என்று சொல்கிறார். அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலில் வயகரா மாத்திரையை கலந்து கார்த்திக்கு கலந்து கொடுக்க வைக்கின்றனர். பிறகு மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து மாத்திரை கலந்து பாலை கொடுத்த விஷயத்தை சொல்லி கொண்டிருக்க, அப்போது கார்த்திக் ரூமுக்குள் நுழைய போனை வைத்து விடுகிறாள்.

கார்த்திக் தீபாவை இடிப்பது, ரொமான்டிக்காக பார்ப்பது என சேட்டையை தொடங்க தீபா பீரோ அருகே சென்று நின்று விடுகிறாள். கார்த்திக் அவளை நெருங்கி வர தீபா கண்ணை மூடி கொள்ள அவன் பீரோவில் இருந்து போர்வையை எடுத்து கொண்டு போய் இழுத்து போத்தி கொண்டு படுத்து தூங்கி விட தீபா ஏமாற்றம் அடைகிறாள். அதன் பிறகு மறுநாள் காலையில் மீனாட்சி என்ன தீபா நைட் எல்லாம் ஓகே தானே என்று கேட்க, அவள் நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் எப்படி இது சாத்தியம் என ஷாக் ஆகின்றனர்.

அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலை கொடுத்தியா? கார்த்திக் குடிச்சானா என்று கேட்க கார்த்திக் அதை குடிக்கவே இல்லை என்ற உண்மையை உடைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்குமோ!

அண்ணா:

ரத்னாவை தூக்கிய முத்துப்பாண்டி.. பாக்கியத்தால் கடுப்பான சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி, சண்முகம் இல்லாததால் வைகுண்டத்தை கைது செய்ய முடிவெடுக்க, பரணி என்னை கூட்டிட்டு போ, நான் தானே அவன் பொண்டாட்டி என்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி அந்த சண்முகம் மட்டும் என் கையில் கிடைச்சா என்கவுண்டர் தான் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்ல வெளியே வரும் ஷண்முகம் எல்லாத்தையும் என் அப்பன் முருகன் பாத்துப்பான் என்று சொல்கிறான்.

ஆனால் பரணி நீ உன்மேல தப்பு இல்லனு முதல்ல நிரூபி. அதுவரைக்கும் உன் தங்கச்சிகளுக்கு பிரச்சனை என்று சொல்லி சண்முகத்தை அனுப்பி வைக்கிறாள். அடுத்து முத்துப்பாண்டி இன்னைக்கு சண்டே வீட்டிற்கு போய் சாப்பிட்டு சண்முகத்தை தேடலாம் என்று உடன் இருக்கும் போலீஸ்காரர்களையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு வர பாக்கியம் சாப்பாடு பரிமாற அங்கு வரும் சௌந்தரபாண்டி சண்முகத்தை பிடிச்சாச்சா என்று கேட்கிறான்.

முத்துப்பாண்டி இன்னும் இல்ல என்று சொன்னதும் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசி என் பிள்ளையா இருந்தா அவனை பிடிச்சிட்டு வந்து சாப்பாட்டுல கையை வை என்று திட்ட, முத்துப்பாண்டி அவனை பிடிச்சிட்டு வரேன் என்று வீராப்புடன் கிளம்புகிறான். பாக்கியம் என் மருமகனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது, அவன் ஒன்னும் பூனை குட்டி இல்ல, புலிக்குட்டி என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு துப்பாக்கியை எடுக்க சனியன் அங்கிருந்து ஓட்டம் எடுக்கிறான்.

நீ எதுக்குடா ஓடுற என்று கேட்க யாரும் இல்லனா என்னை தான் சுடுவீங்க அதான் என்று சொல்கிறான். அந்த சண்முகத்தை கைது பண்ணிட்டு வந்து சாப்பாட்டுல கையை வைக்கிறேன் என கிளம்பி செல்கிறான் முத்துப்பாண்டி. அதனை தொடர்ந்து ரத்னா வேலை செய்யும் ஸ்கூல் அருகே வரும் முத்துப்பாண்டி அக்கியூஸ்ட் தங்கச்சி தானே நீ வண்டியில ஏறு, உன் அண்ணனை எப்படி வர வைக்கணும்னு எனக்குநல்லா தெரியும் என்று ரத்னாவை தூக்கி கொண்டு செல்கிறான்.

இதை பார்த்து விடும் வெட்டுக்கிளி பதறி அடித்து ஓடி வந்து பரணியிடம் விஷயத்தை சொல்கிறாள். இதுக்கு மேல என்ன நடக்கும்? எப்போமே இதே சீன் தானா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment