Advertisment

தம்பிக்கு எதிராக சதி செய்யும் அண்ணன்... மருமகனை வீழ்த்துவாரா மாமனார்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள்

author-image
WebDesk
New Update
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

அண்ணா - கார்த்திகை தீபம்

கார்த்தியின் அடுத்த அதிரடி.. அம்பலமான ரியாவின் உண்மை முகம் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று கார்த்திக் மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று, மேனேஜர் இங்க சாப்பாடு இப்படித்தான் இருக்கும் ஏன் எதுக்குன்னு கேட்கக்கூடாது, நாங்க போடுறதை தான் சாப்பிடணும் என்று சொல்ல ஓனரை கூப்பிடுங்க என்று சத்தம் போடுகிறான்.

இதையடுத்து அங்கு வரும் ஆனந்த் உனக்கு என்னடா பிரச்சனை என்று கேட்க சாப்பாடு சரியில்லை என்று சொல்லி அவனை சாப்பிட வைக்க மண்ணு மாதிரி இருக்கு என்று சொல்ல இதைத்தான் இங்கே சாப்பாடா கொடுத்துட்டு இருக்காங்க என்று கார்த்திக் சொல்ல மேனேஜரை பிடித்து திட்டுகிறான். உடனடியாக காண்ட்ராக்ட் மாத்துங்க என சொல்கிறான்.

இதை எடுத்து ரியா மதுவை சந்தித்து பேச அதை மீனாட்சி மைதிலி பார்த்து விடுகின்றனர். அதைத்தொடர்ந்து மதுவுக்கு வலிப்பு வந்து கீழே விழ ரியா அவர் யாருன்னு எனக்கு தெரியாது என்று அங்கிருந்து நழுவி வருகிறாள். பிறகு மீனாட்சி மற்றும் மைதிலி மதுவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து உங்களுக்கும் ரியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரிக்க ரியா பற்றிய உண்மைகளை உடைக்கிறான்.

அடுத்ததாக ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து இந்த சபதத்தில் கார்த்தியை எப்படியாவது தோற்க வைக்கணும். அவன் தோத்துட்டா உன்னுடைய பிரச்சனை என்னுடைய பிரச்சனையே எல்லாமே சரியாகிவிடும் என்று பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் தீபாவும் அபிராமியும் சேர்ந்து கார்த்திக்காக சமைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சண்முகம்.. வான்டட் ஆக வந்து பல்பு வாங்க போகும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியன் நீ அந்த ஸ்கூல் பங்க்ஷனுக்கு போக வேண்டாம் என்று சண்முகத்திடம் சொல்ல, சண்முகம் காரணம் கேட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சனியன் லுங்கியோட யாராவது ஸ்கூலுக்கு போறாங்களா என்று சொல்கிறான். இதைக் கேட்ட பரணி ஆமா சனியன் சொல்றது சரிதான் என்று சண்முகத்தின் தங்கைகளுடன் சேர்ந்து கோட்டு சூட்டு தைக்க முடிவெடுக்கிறார். அதன் பிறகு சண்முகத்தை டைலர் கடைக்கு கூட்டி செல்ல சண்முகம் சட்டை இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்ல கோட்டு சூட்டு தைக்க அளவு எடுத்துக் கொள்கின்றனர்.

மறுபக்கம் சௌந்தரபாண்டி பிரின்சிபலை சந்தித்து அவரை அடித்து உனக்கு அந்த சண்முகம் பெரிய ஆளா போயிட்டானா நீ திரும்பவும் பத்திரிக்கை அடிக்கணும் அதுல சிறப்பு விருந்தினர் என்று என் பேரு இருக்கணும், அத தான் நீ இந்த ஊருக்கு கொடுக்கணும். அந்த சண்முகம் இந்த பங்ஷனுக்கு வரக்கூடாது என்று சொல்ல பிரின்ஸ்பல் வேறு வழி என்று சம்மதம் சொல்கிறார்.

இந்த விஷயம் அறிந்து இசக்கியும் பாக்கியமும் மரியாதைய கேட்டு வாங்க கூடாது என்று கலாய்கின்றனர். அடுத்ததாக தங்கைகள் சண்முகத்தை இங்கிலீஷில் பேச வைக்க முடிவெடுத்து நைட்டெல்லாம் அவனுக்கு பிராக்டிஸ் கொடுக்க அவன் இங்கிலீஷ் பேச தடுமாறி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்குகிறான். ஸ்கூலில் சண்முகம் போட்டோ போட்ட பேனர் எல்லாம் எடுத்து விட்டு சௌந்தரபாண்டி பேனரை மாற்றுகின்றனர்.

மறுநாள் காலையில் சண்முகத்துக்கு கோட்டு சூட்டு போட்டு அவனை ரெடி பண்ண சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு அந்த சண்முகம் இந்த பங்க்ஷனுக்கு வரக்கூடாது பார்த்துக்கோ என்று சொல்கிறார். சண்முகம் கோட்டு சூட்டில் வர சனியன் ஆள் அடையாளம் தெரியாததால் ஏதோ புது அதிகாரி வந்திருக்காரு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட தங்கைகள் அவனை கூட்டிக்கொண்டு கிளம்புகின்றனர். 

சண்முகம் ரோடு எல்லாம் நடந்து வர அவனை பார்த்து எல்லோரும் வணக்கம் போடுகின்றனர். யார் இந்த அதிகாரி என்று கேட்க சண்முகம் என்ன பார்த்தா இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என ஆச்சரியப்படுகிறான். பிறகு சனியன் சண்முகம் வரல ஏதோ ஒரு ஆபிசர் தான் வராரு என்று சௌந்தரபாண்டிக்கு சொல்ல அதை கேட்டு அவர் சந்தோஷம் அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment