Advertisment

அப்பாவை கொல்ல சென்ற நாயகி : கணவருக்கு லவ் லெட்டர் எழுதிய மனைவி : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள்

author-image
WebDesk
New Update
Zee tamil ams

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கார்த்திக் காதலுக்கு ஓகே சொல்வது போல் ரம்யாவுக்கு லெட்டரை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, அந்த லெட்டரில் ஐ லவ் யூ டூ எனவும் ஆனால் இப்போதைக்கு நம்முடைய காதல் வெளியில் தெரிய வேண்டாம், எனக்கு சில குடும்ப பிரச்சனைகள் இருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போலவும் எழுதி இருக்கிறது. காரத்திக் காதலை ஏற்று கொண்ட சந்தோஷத்தில் ரம்யா இருக்கிறாள்.

மறுபக்கம் அபிராமி கார்த்திக், தீபா கல்யாணத்தில் நான் எதுவுமே பண்ணல, அவங்களுடைய கல்யாண நாளையாவது சிறப்பா கொண்டாடணும்னு நினைப்பதாக சொல்ல அருணாச்சலம் இந்த வீட்டோட அடுத்த நாச்சியார் தீபா தான். நீ கல்யாணமாகி வந்த புதுசுல எப்படி இருந்தாயோ அதே மாதிரி தான் அவளும் இருக்கா என்று சொல்கிறார்.

இதையடுத்து ரம்யா தீபாவை கோவிலில் சந்தித்து அவர் என்னுடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்ல வாழ்த்து சொல்லும் தீபா அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல அவர் கிட்டா சொன்னா உடனே கல்யாணம்னு சொல்லுவார். ஆனால் அது இப்போ முடியாது என்று சொல்கிறாள். இங்கே நடப்பது அனைத்தையும் ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா ரியாவுடன் கூட்டு சேர்ந்து ரம்யாவை வைத்து கேம் விளையாட பிளான் போடுகிறாள்.

இதையடுத்து ரம்யாவின் அப்பாவிடம் தீபா ரம்யாவின் காதல் குறித்து சொல்ல அவர் எம்பிளாயியா என்று முதலில் ஷாக் ஆனாலும் ரம்யா எல்லாத்தையும் யோசித்து சரியா தான் முடிவு எடுத்திருப்பா என்று சம்மதம் சொல்கிறார். மறுபக்கம் அபிராமி கார்த்திக் தீபா கல்யாண நாளை பெருசா கொண்டாட போறதா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள். 

அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடக்க ரம்யா இவர்களது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தருகிறாள். கார்த்திக் ரூமில் ரெடியாகி கொண்டிருக்க ரம்யா அவனை பார்த்து விடுவாளா என்ற பில்டப் எகிற கார்த்திக் கீழே இறங்கி வரும் சமயத்தில் ரம்யாவுக்கு ஒருவனை வைத்து போன் செய்து அப்பாவுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் இருப்பதாக பேச வைக்கிறாள், இதனால் ரம்யா பதறியடித்து கிளம்பி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உண்மையை அறிந்து அரிவாளுடன் கிளம்பிய பரணி.. அதிர்ந்து போன சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சூடாமணியிடம் கொலை பழியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சௌந்தரபாண்டி உன் பையனை நல்லபடியாக படிக்க வச்சு அவனுக்கு என் பொண்ணு பரணியை கட்டி வைக்கிறேன். இது என் பொண்ணு பரணி மேல சத்தியம் என்று சொல்கிறார். அதன் பிறகு உன் மூணு பொண்ணுகளையும் படிக்க வச்சு அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கிறேன். இது மேல் சத்தியம் என்று சொல்லி சூடாமணியை நம்ப வைக்க அவள் பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு செல்ல சம்மதம் தெரிவிக்கிறாள். இந்த விஷயம் அறிந்து பரணி அதிர்ச்சி அடைகிறாள்.

உங்களை நம்ப வச்சு ஏமாத்துன அந்த ஆளை நான் சும்மா விட மாட்டேன் என்று பரணி கோபப்பட சூடாமணி நான் என் பொண்ணு ரத்னா கல்யாணத்த நேரில் பார்க்கணும். அதுக்கு நான் பரோல்ல வெளியே வரணும், அதற்கான வேலைகளை பாருங்க என்று சொல்ல பரணி உங்க தலைமையில் ரத்னா கல்யாணத்த நான் நடத்தி காட்டுறேன் என்று வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு வெளியே வந்த பரணி இளநீர் கடையில் கடைக்காரர் இளநீர் சீவ அந்த கத்தியை பிடிங்கி கொண்டு ஆவேசமாக கிளம்ப ஷண்முகம் எப்பவும் நான் தான் அரிவாளை தூக்குவேன், ஆனால் இப்போ நீ தூக்குற என்று கேட்க அந்த ஆளை கொல்லாமல் விட மாட்டேன் என்று கோபப்படுகிறாள்.

இதை பார்த்த ஷண்முகம் அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்கிறான். வீட்டிற்கு வந்ததும் வைகுண்டத்தை பார்த்து நீங்க தாலி கட்டிய பொண்டாட்டியை ஒருத்தன் ஏமாத்தி ஜெயிலுக்கு அனுப்பி வச்சிருக்கான், நீங்க எல்லாம் ஆம்பளையா என்று கேள்வி கேட்டு வைகுண்டத்தை அதிர வைக்கிறாள்.  பிறகு ஷண்முகம் காய் கறிகளை வாங்கி வந்து ரத்னாவிடம் கொடுத்து சமைக்க சொல்ல அவள் பரணி தானே எப்பவும் சமைப்பா என்று சொன்னதும் பரணி ஏன் நீங்க சமைக்க மாட்டிங்களா? எப்பவும் எல்லா வேலையையும் நான் தான் செய்யணுமா? என்று ஆவேசப்படுகிறாள்.

அடுத்து ஷண்முகம் தூங்கலாமா? வேண்டாமா? என்று பரணிக்காக குழப்பத்தில் இருக்க அவன் ஆழ்ந்து தூங்கியதும் பரணி அரிவாளுடன் கிளம்ப கதவெல்லாம் பூட்டு போட்டு லாக் செய்து இருக்க பின்பக்கமாக சென்று சுவர் ஏறி குதித்து சௌந்தரபாண்டி பாண்டி வீட்டிற்கு வருகிறாள். விடியற்காலையில் சௌந்தரபாண்டி பேப்பர் படித்து கொண்டிருக்க அரிவாளுடன் வந்த பரணியை பார்த்த அவர் என்ன எப்பவும் உன் புருஷன் தான் அரிவாளை தூக்கிட்டு வருவான், இப்போ நீ வந்திருக்க என்று கேட்டதும் பரணியை அரிவாளை தூக்கி ஒரே போடாக போட பேப்பர் ரெண்டாக கிழிய சௌந்தரபாண்டி மிரண்டு போகிறார். இதையடுத்து உன்னை கொல்ல தாண்டா வந்தேன் என்று அரிவாளை எடுத்து வெட்ட போக ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகிறார். 

பிறகு சனியன் பரணியை பிடிக்க வர பரணி அவனையும் வெட்ட போக சனியன் பயந்து நிற்கிறான். சௌந்தரபாண்டி ஒரு இடத்தில லாக்காக பரணி மீண்டும் வெட்ட போக ஷண்முகம் தடுத்து  நிறுத்துகிறான். நீ என் அத்தை சூடாமணிக்கு செய்த துரோகம் எல்லாம் தெரிந்து போச்சு, அவங்களை பாத்துட்டு தான் நான் வந்திருக்கேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். ஷண்முகம் பரணியை அலேக்காக வெளியே தூக்கி செல்ல இசக்கியும் பாக்கியமும் இவளுக்கு என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் பேய் பிடிச்சிருக்கு என்று சமாளிக்கிறான். அடுத்து முத்துப்பாண்டி வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி நடந்த விஷயத்தை சொல்ல அந்த சூடாமணி இன்னும் உயிரோட இருக்காங்களா என்று கேட்கிறான். 

பிறகு சௌந்தரபாண்டி முத்துபாண்டியை 20 வருஷமாக யாரும் போகாத ரூமுக்கு கூட்டி சென்று நகைகளை காட்ட அதை பார்த்து முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment