Advertisment

மகளை கடத்த ப்ளான் போடும் அப்பா : மனைவி நடந்த துரோகத்தை ஹீரோ கண்டுபிடிப்பாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial News 12

அண்ணா - காத்திகை தீபம்

டாட்டூவை வைத்து சிக்கிய ரம்யா.. சைலண்ட்டாக கார்த்திக் வைத்த செக்மேட்

Advertisment

கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் யாரோ ஒருவர் ஒரு லெட்டரை கொடுக்க கார்த்திக் அந்த லெட்டரை கொண்டு வந்து போலீசில் கொடுக்க அது மேஜிக் பேனாவால் எழுதப்பட்ட லெட்டர் என்பதை தெரியவந்தது. இந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு அவளை பார்க்க வர ஐஸ்வர்யா மற்றும் ரியா இருவரும் சேர்ந்து தீபாவுக்கு நடக்கும் விஷயங்கள் பற்றி ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கார்த்திக் சர்வர் ஒருவரை கூப்பிட்டு ரகசியமாக ஏதோ பேசி பணத்தை கொடுத்து அனுப்புகிறான். அந்த சர்வர் ஐஸ்வர்யாவிடம் இந்த பேப்பரை கொடுத்து பேனாவையும் கொடுத்து ஹோட்டல் குறித்து ரேட்டிங் குடுக்க சொல்லி சொல்கிறான்.

ஐஸ்வர்யாவும் எழுதிக் கொடுக்க சர்வர் என்ன மேடம் எதுவுமே இல்ல என்று கேட்க ஐஸ்வர்யா எழுதினேனே என்று சொல்கிறாள். பிறகு அந்த சர்வர் சாரி மேடம் நான் தான் மேஜிக் பேனாவை கொடுத்துட்டு இருக்கேன் என்று சொன்னதும் ஐஸ்வர்யா அதை ஆச்சரியமாக வாங்கி பார்க்க கார்த்தி இந்த லெட்டரை கொடுத்தது ஐஸ்வர்யா இல்லை என்பதை உறுதி செய்கிறான். பிறகு வீட்டுக்கு வர தீபா கை வலியில் தவிக்க கார்த்திக் அவளுக்கு கையை பிடித்து விடுகிறான்.

அடுத்த நாள் ஆபீஸ் வர ரம்யா மோதிரத்தை கொடுக்க அப்போது கார்த்திக் அவளது கையில் இருக்கும் டாட்டூவை பார்க்கிறான். மீனாட்சி அனுப்பிய போட்டோவிலும் இதே டேட்டூ இருப்பது கார்த்திக்கு ஞாபகம் வருகிறது. இதனால் வீட்டுக்கு வந்த கார்த்தி தீபாவிடம் உங்க பிரண்டை வர சொல்லுங்க ஒருநாள் நேர்ல பார்க்கலாம் என்று சொல்ல தீபாவும் ரம்யாவை வர சொல்கிறாள். கார்த்திக் வர சொன்னதாக ரம்யாவிற்கு தெரிய வந்ததும் அவள் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தலில் நிற்க மாட்டேன்.. பாக்கியத்துக்கு சத்தியம் செய்த சண்முகம், ஷாக் கொடுத்த பரணி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் இசக்கி சண்முகத்திடம் வந்து சௌந்தரபாண்டியன் நிலைமையை எடுத்து சொல்லி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கெஞ்சிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது பாக்கியம் இந்த தேர்தலில் மட்டும் உன் மாமா ஜெயிக்கலனா அவருக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு என்று கெஞ்சுகிறார். அத்தை கெஞ்சி கேட்டதால் மறுக்க முடியாத சண்முகம் நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறான்.அதன் பிறகு இந்த விஷயம் அறிந்த பரணி சண்முகம் வீட்டுக்கு வந்ததும் பொருட்களை தூக்கி போட்டு உடைத்து நீ எதுக்கு சத்தியம் பண்ண என்று ஆவேசப்படுகிறார்.

சண்முகம் அத்தை எனக்கு அம்மா மாதிரி அது கேட்கும் போது என்னால மறுக்க முடியல என்று சொல்கிறான். மறுபக்கம் வீட்டுக்கு வந்த பாக்கியம் சண்முகம் தேர்தல் நிக்க மாட்டான் நீங்க தான் ஜெயிப்பீங்க என்று சொல்ல அதை கேட்டு அவர் பைத்தியம் குணமானது போல நடிக்கிறார். இதையடுத்து சண்முகம் வெட்டுக்கிளி உடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னாடி காரில் துரத்தி வரும் சௌந்தரபாண்டி சண்முகத்தை மடக்கி நீ தேர்தல் நிற்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணிட்டு உன் பொண்டாட்டிய நிக்க வச்சுட்டியா என்று கோபப்படுகிறார்.

பரணி தேர்தலில் நிற்கும் விஷயம் அறிந்து சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். வீட்டுக்கு வந்த சண்முகம் என் அத்தைக்கு நான் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் அப்படி இருக்கும்போது நீ எதுக்கு தேர்தல்ல நிற்கிற என்று கோபப்பட நீ உன் அத்தைக்கு சத்தியம் பண்ணி கொடுத்த மாதிரி நான் என் அத்தைக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறாள்.

இதைக் கேட்டதும் சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் அம்மாவை பார்த்தீர்களா என்று கேள்வி கேட்க பரணி பாக்கல அவங்களுக்காக சில செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கு அதுதான் சொன்னேன் என்று சமாளிக்கிறாள். பஞ்சாயத்தார் பரணி தேர்தலில் நிற்பதை அறிவிக்க பாண்டியம்மா இதை இப்படியே விடக்கூடாது என்று சௌந்திரபாண்டிக்கு ஒரு ஐடியா சொல்ல அவர் ஏ.கே அண்ணாச்சியை சந்தித்து பரணியை கடத்த சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment