சூடாமணியை அம்மானு சொன்ன இசக்கி.. அசிங்கப்பட்ட சௌந்தரபாண்டி
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் இரண்டு குடும்பமும் கோவிலுக்கு கிளம்பி வந்திருந்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டியும் சனியனும் தனியாக கோவிலுக்குள் வர யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர், உள்ளே நிர்வாகிகள் எல்லாரும் வரவேற்க நின்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி அதை பார்த்து தன்னை வரவேற்க தான் என்று நினைத்து கொள்கிறார்.
இறுதியாக அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ள பரணியை வரவேற்க சௌந்தரபாண்டி பல்பு வாங்குகிறார், அதன் பிறகு இசக்கி முத்துபாண்டியை அழைத்து வந்து இவர் இப்போ எல்லாம் முன்ன மாதிரி இல்லை, மாறிட்டாரு என்று சண்முகத்திடம் சொல்கிறாள். இசக்கி சூடாமணியை பார்த்ததும் அம்மா என்று சொல்ல அனைவரும் ஷாக்காக அம்மாவை தான் அம்மானு கூப்பிட முடியல, அம்மாவோட தோழி உங்களை அம்மானு கூப்பிடலாம் தானே என்று கேட்க சூடாமணி நீ அப்படியே கூப்பிடு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள்.
மறுபக்கம் சௌந்தரபாண்டி ஒரு பெண்ணை பார்த்து சூடாமணி போலவே இருப்பதாக சொல்லி பின்தொடர்ந்து சென்று அந்த பெண் கையை பிடித்து இழுக்க அந்த பெண் பெரிய மனுஷனா இருக்க அசிங்கமே இல்லாமல் கையை பிடிச்சு இழுக்குற என்று திட்டுகிறாள். அதன் பிறகு இசக்கி விளக்கு போட வேண்டும் என்று சொல்ல சூடாமணி எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறாள். அடுத்து இசக்கி விளக்கு ஏற்றியதும் அது அணைய போக சூடாமணி ஓடி வந்து விளக்கை அணையாமல் காக்கிறாள். அடுத்து இசக்கிக்கு முடி எடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஸ்வர்யாவுக்கு விழுந்த பளார் அறை.. போலி சாமியாருடன் சிக்க போகும் ரம்யா?
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி கண் திறக்க தீபா மஞ்சக்கயிறுடன் இருப்பதை பார்த்து கார்த்தியிடம் தீபா கழுத்தில் திரும்பவும் நீ அந்த தாலியை கட்டணும் அதை நான் என் கண் குளிர பார்க்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று, அபிராமிக்கு சாப்பாடு கொடுக்க அவள் தனது மருமகள்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்க மூவரும் சாப்பிட்டோம் என்று சொல்கின்றனர்.
மீனாட்சி எதுக்கு தீபா பொய் சொல்ற? அவ உங்களுக்காக விரதம் இருக்கா ஒரு வேலை மட்டும்தான் சாப்பிடுகிறாள் என்று சொல்ல அபிராமி நான்தான் குணமாகிட்டேனே அப்புறம் எதுக்கு இந்த விரதம் எல்லாம் என்று சொல்கிறாள். மறுபக்கம் போலி சாமியார் சேகர் ரம்யாவின் வீட்டிற்கு வந்து அவளை சந்திக்க உனக்கு பணம் தரேன் கொஞ்சம் நாளைக்கு இந்த ஊர்ல இருக்காதா என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள் ரம்யா.
அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி அபிராமி ஹாஸ்பிடல் இருக்கும் விஷயம் அறிந்து பதறி அடித்து ஓடி வர ஐஸ்வர்யா முதல்ல நாம போய் பேசி ஸ்கோர் செய்யலாம் என்று பாட்டி என்று கூப்பிட்டு அபிராமி பற்றி சொல்ல போக கன்னத்தில் பளார் என ஒரு அரை கொடுக்கிறார். வீட்ல இத்தனை பேர் குத்துக்கல் போல இருக்கீங்க அபிராமிக்கு இப்படி ஆச்சுன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா என்று கோபப்படுகிறாள்.
அதன் பிறகு தீபாவின் விரதம் குறித்து தெரிய வர பரமேஸ்வரி பாட்டி தீபாவை பற்றி பெருமையாக பேச ஐஸ்வர்யா என்ன செயினுக்கு பதில் மஞ்ச கயிறு போட்டு இருக்கா அவ்வளவுதான் இதில் என்ன இருக்கு என்று கேட்கிறாள். பரமேஸ்வரி பாட்டி தாலியை கழற்றுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. புருஷனுக்காக தான் இதெல்லாம் செய்வாங்க அப்படி இருக்கும் போது தீபா அவளுடைய மாமியாருக்காக செய்திருப்பது பெரிய விஷயம் என்று சொல்கிறாள்.
அதைத்தொடர்ந்து இளையராஜா பைக்கில் வந்து கொண்டிருக்க தவறுதலாக போலி சாமியார் சேகர் மீது இடிக்க இருவருக்கும் வாக்குவாதம் உருவாக அங்கு வந்த போலீஸ் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடுகின்றனர். சேகர் ரம்யாவுக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்ல இளையராஜா கார்த்திக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.