Advertisment

சுயரூபத்தை காட்டும் மாப்பிள்ளை: மனைவியை கண்டு பிடிப்பாரா ஹீரோ? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Karnadaka Police Karthigai Deepam

ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? 

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கையில் தீபாவின் தாலி கிடைக்க அவன் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்த்த பெண்மணி வீட்டிற்கு வந்து விசாரித்த நிலையில் இன்று, அந்த பெண்மணி தீபாவை சென்னையில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக சொல்ல கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். 

மறுபக்கம் தீபா ஐசியூவில் இருக்க இதே ஹாஸ்பிடலுக்கு வந்த ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவர் தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தகவல் கொடுக்க அவள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள். அதேபோல் கீதாவை தேடி அலையும் துங்கா இதே ஹாஸ்பிடலுக்கு வர தீபாவை பார்த்து கீதா நினைத்து இவங்க பேர் கீதா எனக்கு தெரிந்த பொண்ணு தான். எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று பாவமாக பேச நர்ஸ் அவர்களுடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறாள்.

இதைத்தொடர்ந்து துங்கா தனது ஆட்களுக்கு கீதா கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருக்க இதை நர்ஸ் கேட்டுவிட்டு தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள். துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரத்னாவுக்காக சண்முகம் எடுத்த முடிவு.. அடுத்து நடக்கப்போவது என்ன?

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் வீட்டுக்கு வந்த வெங்கடேஷ் நீங்க ரத்னாவோட வாழ முடியாது தாலிய கழட்டி கொடுத்து விடு என அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் ரத்னா செய்தது தப்பு என பேச ரத்னா நான் எந்த தப்பும் பண்ணல வெங்கடேஷோட தாய் மாமா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் அவர் எதுக்கு இப்படி மாத்தி பேசுறாருன்னு தெரியல என்று சொல்கிறாள்.

பிறகு சண்முகம் வெங்கடேஷ் குடும்பத்துடன் தான் பேசுவதாக சொன்ன ரத்னா நீங்க எதுக்கு பேசணும் வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் சண்முகம் ஒரு அண்ணனாக உன்னோட வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என்னுடைய கடமை என வாக்கு கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து சண்முகம் நைட் நேரத்தில் தனியாக உட்கார்ந்து சூடாமணி உயிரோட இருக்கும்போது என்ன பிரச்சனை வந்தாலும் பொறுமையா நிதானமா இருந்து தங்கச்சிகளோட வாழ்க்கையை சரி செய்ய வேண்டியது உன்னுடைய கடமை என அறிவுரை வழங்கியதை நினைத்து பார்க்கிறான்.

அடுத்த நாள் காலையில் வீரா பரிச்சையில் பாஸ் ஆகி விட்டதாகவும் ட்ரைனிங்கிற்கு வர சொல்லி லெட்டர் வருகிறது. இதைத் தொடர்ந்து சண்முகம் குடும்பத்தினர் வீராவை டிரைனிங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து சண்முகம் மற்றும் பரணி என இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து ரத்னா வாழ்க்கையை சரி செய்வதை பற்றி பேசுகின்றனர். ரத்னாவுடன் வாழ முடியாது என சொன்ன வெங்கடேஷ் இனி எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment