துங்காவிடம் சரணடைந்த கீதா.. ஐஸ்வர்யாவால் கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை காப்பாற்றுவதற்காக கீதா துங்காவிடம் சரணடைய முடிவெடுத்த நிலையில் இன்று, கீதா லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பிச் செல்ல ஐஸ்வர்யா இந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கீதா துங்காவிடம் சரணடைந்தால் அவன் தீபாவை விட்டு விடுவான். அதனால நமக்கு தான் ஆபத்து என அஞ்சுகிறாள்.
அதனால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கும் ஐஸ்வர்யா எல்லாரையும் கூட்டி லெட்டரை காட்டி விஷயத்தை சொல்ல கார்த்திக் கீதாவை காப்பாற்ற கிளம்பி செல்கிறான். மறுபக்கம் கீதா துங்காவை சந்திக்க அவன் நான் உன்னையே கொல்ல போறேன் என்று சொல்ல அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக் துங்காவிடம் இருந்து கீதாவை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மரண பயத்தைக் காட்டிய முத்துப்பாண்டி.. இசக்கிக்கு நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா ஏற்பாடு செய்த ரவுடிகள் இசக்கி கடத்த முத்துப்பாண்டி சௌந்தரபாண்டி வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி நான் இசக்கியை கடத்தல என சொல்லிக் கொண்டிருக்க முத்துப்பாண்டி அதை ஏற்க மறுக்கிறான். இன்னொரு பக்கம் இசக்கி நான் யாருன்னு தெரியுமா? இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஓட பொண்டாட்டி என்று சொல்ல ரவுடிகள் மிரண்டு போகின்றனர்.
பாண்டியம்மாவுக்கு போன் போட்டு இசக்கியோட புருஷன் போலீசா என்று கேட்க அவள் சமாளித்து போனை வைக்கிறாள். அதன் பிறகு இசக்கி கடத்தி வைத்திருக்கும் குடோனுக்குள் என்ட்ரி கொடுத்த சண்முகம் ரவுடிகளை அடித்து போட்டு இசக்கியை காப்பாற்றி அழைத்து வருகிறான். முத்துப்பாண்டி பார்த்த இசக்கி ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள சௌந்தரபாண்டி இசக்கி கிடைத்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதார்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“