கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்.. ரேவதியிடம் உண்மையை சொல்ல வந்த மகேஷ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை துணிக்கடைக்கு அழைத்து சென்று மாயாவை திசை திருப்பி கார்த்திக் திட்டத்தின் அவளது போன் தூக்கப்பட்ட நிலையில் இன்று, துணி எடுத்து கொண்டு வீட்டிற்கு வரும் மகேஷ் மாயா மாயா என்று கூப்பிட மாயா இல்ல என்பது தெரிய வருகிறது. உடனே அவளுக்கு விடாமல் போன் செய்ய மாயா போன் கார்த்தியிடம் இருக்கிறது.
அடுத்ததாக கார்த்திக் போனை எடுத்து என்ன மகேஷ் மாயாவை தேடுறியா? அவங்களை நான் தான் கடத்தி வச்சிருக்கேன், ஒழுங்கு மரியாதையா ரேவதி கிட்ட போய் உனக்கும் மாயாவுக்கும் இருக்கும் தொடர்பை பத்தி சொல்லு, இல்லனா மாயாவை கொன்னுடுவேன் என்று மிரட்ட மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் மெஹந்தி போட தயாராக மகேஷ் பதறியடித்து ஓடி வந்து ரேவதியை விசாரிக்கிறான்.
ரேவதி மேலே இருப்பதாக தெரிந்து மகேஷ் அங்கு வர, மறுபக்கம் மாயா சாமுண்டீஸ்வரியை கோவிலில் சந்தித்து எதற்காக வர சொல்லி இருந்தீங்க என்று கேட்க நான் வர சொல்லலையே என்று சொல்கிறாள். இங்கே மகேஷ் ரேவதியை தனியாக அழைத்து சென்று நான் உன்னை உண்மையா லவ் பண்ணல.. அண்ணி சொல்லி தான் என்று சொல்ல ரேவதி என்ன உளறிட்டு இருக்க என்று கேட்கிறாள். மகேஷ் எனக்கும் அண்ணிக்கும் என்று தொடர்பை பற்றி சொல்ல வருகிறான்.
அந்த சமயத்தில் உள்ளே நுழையும் மாயா உண்மையை சொல்ல விடாமல் தடுத்து சமாளித்து விடுகிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குல்பி சாப்பிட வந்து சிக்கிக்கொண்ட முத்துப்பாண்டி, இசக்கி.. ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் வேலை - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் குல்பி சாப்பிட சென்ற நிலையில் இன்று, சண்முகம் மற்றும் பரணி என இருவரும் குல்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முத்துப்பாண்டி மற்றும் இசக்கி என இருவரும் மறைந்து மறைந்து வருவதை பார்த்து இவர்கள் ஓடி ஒளிந்து மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றனர். இதையடுத்து இருவரும் குல்பி வாங்கி சாப்பிடுகின்றனர். உன் கூட இப்படி தனியாக வெளியே வரணும் என்பதற்காகத்தான் குல்பி சாப்பிட கூட கூட்டிட்டு வந்ததாக முத்துப்பாண்டி சொல்கிறான்.
ஒரு சிறிய மரத்திற்கு பின்னால் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் முழுமையாக ஒளிய முடியாமல் ஒளிந்திருக்க இதை பார்த்த முத்துப்பாண்டி கள்ளக்காதல் ஜோடி என பேச பரணி யாருடா கள்ளக்காதல் இது நல்ல காதல் என சண்முகத்துடன் வெளியே வர இருவரும் ஷாக்காகின்றனர். அதன் பிறகு சண்முகம் குல்பி வண்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்று எல்லோருக்கும் குல்பி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்கிறான்.
குல்பிக்காரன் தினமும் உங்க வீட்டுக்கு வந்துடறேன்.. இங்கதான் நல்லா சேல் ஆகுது என்று சொல்ல சண்முகம் என் சொத்தை அழிக்க பாக்குறியா ஓடுடா என விரட்டி விடுகிறான். பிறகு வெங்கடேஷ் உடம்பு முடியல என்று சொல்லி ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு சௌந்தரபாண்டியை சென்று சந்திக்க அவர் ஒரு சொட்டு மருந்தை கொடுத்து அதை ரத்னா மற்றும் அறிவழகனை குடிக்க வைக்க சொல்கிறான்.
வீட்டில் வெங்கடேஷ் இல்லாததால் இசக்கி அவனுக்கு போன் செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் அவளுக்கு சந்தேகம் எழ மறுபக்கம் வெங்கடேஷ் பியூனை சந்தித்து டீயில் சொட்டு மருந்து கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.