நியூ என்ட்ரி கொடுத்த அறிவழகன்.. ரத்னாவுக்கு ஷாக், யார் இவன்? - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சௌந்தரபாண்டி வெட்டுப்பட்ட வழக்கில் இசக்கி கைது செய்யப்பட்ட நிலையில் சண்முகம் சவால் விட்டபடி இசக்கி மீது எந்த தவறும் இல்லை என தெரிந்து வெளியே வந்த நிலையில் இன்று, வெங்கடேஷ் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து எப்படியாவது சண்முகம் வீட்டுக்குள் நுழைந்து அந்த ரத்னா மற்றும் சண்முகம் குடும்பத்தோட சந்தோஷத்தை அழிக்கணும் என திட்டம் போடுகிறான்.
அடுத்ததாக ஸ்கூலில் வெங்கடேஷ்க்கு பதிலாக புதியதாக ஒரு வாத்தியார் வர இருக்க அவரை வரவேற்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரத்னா ஆட்டோவில் வந்து இறங்க எல்லோரும் எதுக்கு நின்னுகிட்டு இருக்கீங்க என்று கேட்க வெங்கடேஷ்க்கு பதிலாக வரவேண்டிய வாத்தியார் இன்னும் வரவில்லை என சொல்கின்றனர். ரத்னா சரியான நேரத்துக்கு வர வேண்டாமா என கோபப்பட பியூன் அவர் ஏற்கனவே வந்து கிளாசுக்கு போயிட்டதாக சொல்கிறார்.
அதன் பிறகு கிளாசுக்கு வந்து பார்க்க அறிவழகன் என்ற வாத்தியார் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் வழக்கமான வாத்தியார் போல இல்லாமல் செம ஸ்டைலாக இருப்பதை பார்த்து ஸ்கூலுக்கு இப்படியான வருவது என கேள்வி கேட்கிறாள் ரத்னா. ஏன் வாத்தியார் என்றால் கோடு போட்ட சட்டை போட்டு இன் பண்ணிட்டு தான் இருக்கணுமா? என்று அறிவழகன் கேட்க ரத்னா சரி கிளாஸ் எடுங்க பார்க்கலாம் என சொல்கிறாள்.
புத்தகப் படிப்பு என்பது ஒரு சப்ஜெக்ட் தான் அதை மட்டும் தெரிஞ்சுக்க கூடாது என வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்களை எடுத்து சொல்லி கிளாஸ் எடுக்க ரத்னா தன்னை ஹெட் மாஸ்டர் ரூமில் இருந்து சந்திக்குமாறு சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.இதையடுத்து அறிவழகன் ரத்னா ரூமுக்குள் வந்து அவளைப் பார்த்து முருங்கைக்காய் முண்டக்கண்ணி என கூப்பிட ரத்னா என் பட்ட பெயர் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறாள்.
நீ இந்த ஸ்கூல்ல எட்டாவது படிக்கும் போது நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தேன் என்று சொல்கிறான். இதையடுத்து ப்ளாஷ்கட்டில் ரத்னா படிக்கும்போது அவளுக்கு அறிவழகன் லவ் லெட்டர் கொடுக்க ரத்னா அதை சண்முகத்திடம் சொல்ல சண்முகம் அறிவழகனை கூப்பிட்டு வார்னிங் செய்து அனுப்பி விட்ட தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலசத்துடன் வந்த கார்த்திக், கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி.. சந்திரா கலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் வெளிநாட்டவருக்கு கைமாறிய கலசத்தை கைப்பற்றிய நிலையில் இன்று, கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் கலசத்தை கொண்டு வருகின்றனர். இதே சமயத்தில் ஊர் மக்களும் கலசத்தை கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர். பிறகு கலசம் எங்கே என்று கேட்க ரேவதி பூஜை செய்து கொண்டு வருகிறாள்.
அதன் பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி வர இங்கே கோவிலில் கலசம் எப்படியும் வராது என சிவனாண்டி கனவு கண்டு கொண்டு இருக்க வெடி சத்தத்துடன் கலசத்தைக் கொண்டு வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு கோவிலில் வைத்து கலசத்துக்கு பூஜை செய்து சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுத்து அவளது கையால் கோபுரத்தில் வைத்து கும்பாபிஷேகம் செய்கிறாள்.
அதைத்தொடர்ந்து பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க கூடாது.. பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்கள் இல்லை அவர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவர்கள். பெண்களுக்காக இன்னொரு ஸ்கூல், காலேஜ் திறக்கப் போகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு ஃபேக்டரியையும் ஓபன் செய்து பெண்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்ன சொல்ல எல்லோரும் சாமுண்டீஸ்வரியை பாராட்டுகின்றனர்.
பிறகு சிவனாண்டி மற்றும் சந்திரகலா என இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்க அவ நம்மளை அவமானப்படுத்திட்டு போயிட்டா.. இந்த கலசம் எப்படி வந்தது என சிவனாண்டி கோபப்படுகிறான். சந்திரகலா கலசத்தை எடுத்தது நான்தான் என்பதை கார்த்திக் போட்டுக் கொடுத்து விடுவானோ என பயப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.