சந்திரகலாவை பதற வைத்த கார்த்திக்.. சாமுண்டேஸ்வரி கொடுத்த பெரிய ஷாக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாப்பிட உட்கார்ந்த கார்த்திக்கை அவமானப்படுத்துவது போல் பேசிய நிலையில் இன்று, சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து கார்த்திக்கு என் மேல சந்தேகம் வந்து சாமுண்டீஸ்வரி கிட்ட போட்டு கொடுத்துடுவானேனு பயமா இருக்கு என்று புலம்ப, சிவனாண்டி அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி போனை வைக்க, இங்கே சந்திரகலா பின்பு கார்த்திக் நின்று கொண்டிருக்க, அதை பார்த்து ஷாக் ஆகிறாள்.
சந்திரகலா என்ன நான் பேசுறதை ஒட்டு கேட்க வந்தியா என்று கேட்க இல்லை என்று சொல்லி அங்கிருந்து நகர்கிறான், அடுத்து கார்த்திக் பந்தக்கால் நடுவதற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்ய, ராஜராஜன் இதை பார்த்து இவன் நல்லவனா கெட்டவனா என கன்பியூஸ் ஆக சந்திரகலா கண்டிப்பா கெட்டவன் தான் என்று சொல்கிறாள். பிறகு அய்யரும் வந்து விட சாமுண்டேஸ்வரி உங்களுக்கு எந்த உதவியா இருந்தாலும் ட்ரைவர் கிட்ட கேளுங்க என்று கார்த்தியை கை காட்டுகிறாள்.
அடுத்து மகேஷ் மற்றும் மாயா என இருவரும் இங்கு வந்து விடுகின்றனர், சாமுண்டேஸ்வரி ரோட்டையே பார்த்தபடி இருக்க மாயா என்னாச்சு என்று கேட்கிறாள். இல்ல டாக்டர் வரதா சொன்னாங்க என்று சொல்ல மாயா மற்றும் மகேஷ் என இருவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். மாயா மகேஷை தனியாக அழைத்து சென்று நான் போய் அந்த டாக்டரை வர விடாமல் தடுக்கிறேன். என்னை பத்தி கேட்டா நீ எதையாவது சொல்லி சமாளி என்று கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலிரவில் மாலை அணிந்து வந்து ஷாக் கொடுத்த இசக்கி.. முத்துப்பாண்டி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி மற்றும் முத்துபாண்டியின் சாந்திமுகூர்த்தத்திற்காக நாள் குறித்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி ரூமுக்குள் இசக்கிக்காக காத்துக் கொண்டிருக்க இசக்கி பால் கொண்டு வந்து கொடுக்க அதை முத்துப்பாண்டி மேலே சிந்தியபடி குடிக்க இசக்கி என்ன மாமா பாலை இப்படியா குடிப்பீங்க என்று இசக்கி துடைத்து விடுகிறாள்.
கடைசியில் இது முத்துபாண்டியின் கனவு என தெரிய வருகிறது, அதன் பிறகு உண்மையாகவே முத்துப்பாண்டி இசக்கிக்காக ரூமில் காத்திருக்க இசக்கியும் உள்ளே வருகிறாள். முத்துப்பாண்டி சுவற்றை பார்த்தபடி இது திடீர் முடிவு தான், உனக்கும் விருப்பம் இருக்கும்னு நினைக்கிறேன் என திரும்ப சாமி என இசக்கி முருகனுக்கு மாலை போட்டு வந்து நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
நீங்க இந்த வீட்டிற்கு நல்லபடியாக வந்ததால் முருகனுக்கு மாலை போட்டு இருக்கேன் என்று சொல்ல, முத்துப்பாண்டி எதுக்கு இந்த சாந்திமுகூர்த்தத்துக்கு எல்லாம் நாள் குறிச்சிங்க, நான் கேட்டனா என கோபப்படுகிறான். மேலும் முப்பிடாதிக்கு போன் செய்து அந்த திருட்டு கும்பலை தனிப்படை அமைச்சோம்ல அதுக்கு நானே தலைமையா இருக்கேன். 1 மாசத்துல அவனை கண்டு பிடிக்கலாம். ஒரு மாசத்துக்கு எனக்கு நைட் டியூட்டி தான் என்று சொல்லி கிளம்பி செல்கிறான்.
அடுத்த நாள் காலையில் முத்துபாண்டிக்கு ஒருவர் காபி கொண்டு வந்து கொடுப்பது, இன்னோருத்தர் சுடு தண்ணி ஏற்பாடு பண்றது, துணியை அயர்ன் செய்து வைப்பது என அவனை பார்த்து பார்த்து கவனித்து கொள்ள முத்துப்பாண்டி கல்யாணத்திற்கு பிறகு சண்முகம் வீட்டிற்கு வர முடிவு பண்ணது சரியான முடிவு தான் என நெகிழ்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.