/indian-express-tamil/media/media_files/2024/11/12/KNPGtSqU4rUro0z6ildA.jpg)
முருகனை நாடிய பாட்டி.. ரேவதியை அலேக்காக தூக்கி பரிசு வென்ற கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய நிலையில் இன்று, அதாவது, பரமேஸ்வரி பாட்டி முருகனை கூப்பிட்டு பேர பிள்ளைகளுக்கு ஆசைப்பட்ட மாதிரி துணி எடுத்து கொடுத்துட்டேன். என் பிள்ளைக்கும் மருமகளுக்கும் எடுத்து கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் என்று ஆதங்கத்தை சொல்கிறாள்.
முருகன் அதுக்கு எதுக்கு பாட்டி என்னை கூப்பிடுற.. மாறுவேஷத்தில் போ என்று சொல்ல பாட்டி எப்படி முருகா கண்டுபிடிச்சிட்டா பிரச்னையாகிடும் என்று பயப்படுகிறாள். முருகன் நிச்சயத்துக்கு நான் சொன்ன மாதிரி போனியே மாட்டிகிட்டியா? அதே மாதிரி இப்போவும் மாட்டிக்க மாட்ட என்று சொல்ல பரமேஸ்வரி பாடி ஒரு சாமியார் வேஷத்தில் ரெடியாக முருகன் சூப்பர் பாட்டி என்று சொல்லி மறைகிறான்.
அடுத்து இங்கே சாமுண்டேஸ்வரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராக ரேவதி வெளியில் பெரிய ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருக்கிறாள். கோலத்தை முடித்து விட்டு பார்த்தால் கோலத்திற்கு நடுவில் இருக்கிறாள். கோலம் கலையாமல் வெளியே வர முயற்சி செய்கிறாள். வீட்டில் உள்ளவர்கள் கோலம் கலைந்தால் பரவாயில்லை என்று சொல்லியும் ரேவதி வர மறுக்கிறாள்.
இந்த சமயத்தில் மகேஷ், மாயா வீட்டிற்கு வர சாமுண்டீஸ்வரி கோலம் கலையாமல் ரேவதியை வெளியே அழைத்து வர சொல்கிறாள். ரேவதியை வெளியே அழைத்து வர முடிவு செய்யும் மகேஷ் கீழே விழுந்து விடுகிறான். இதை தொடர்ந்து சாமுண்டேஸ்வரி ரேவதியை கோலம் கலையாமல் வெளியே கொண்டு வருபவருக்கு 10,000 ரூபாய் பரிசு என்று சொல்கிறாள். கார்த்திக் போட்டியில் நான் கலந்துக்கலாமா என்று கேட்டு ரேவதியை அலேக்காக தூக்கி வெளியே கொண்டு வர இருவரும் மோதி கீழே விழுகின்றனர். இதை பார்த்து மகேஷ், மாயா கடுப்பாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரொமான்டிக் மோடில் சண்முகம்.. வன்மத்துடன் வீட்டிற்குள் நுழையும் வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குடும்பத்தினர் எல்லாரும் பழைய துணிகளை எரித்து போகி கொண்டாடிய நிலையில் இன்று, போகி கொண்டாடும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் கலர் பவுடர் பூசி கொண்டு சந்தோசமாக இருக்க பரணி சண்முகம் முகத்தில் கலர் பவுடர் பூசும் போது கண்ணில் பட்டு விட்டதாக சொல்கிறான்.
பரணி என்னாச்சு நான் பார்க்குறேன் என்று கண்ணில் ஊத ஷண்முகம் தனியாக கூட்டிட்டு போங்க என்று சொல்கிறான். தனியாக அழைத்து சென்றதும் ஷண்முகம் கண்ணில் எதுவும் படல.. தனியா வரதுக்கு தான் இப்படி சொன்னேன் என்று சொல்கிறான். பரணி எனக்கும் அது தெரிந்து தான் வந்ததாக சொல்ல இருவருக்கும் இடையே ரொமான்ஸ் உருவாகிறது.
அடுத்ததாக பரணி வெங்கடேஷ்க்கு போன் செய்து ஷண்முகத்திடம் பேசிட்டேன்.. நாளைக்கு நீ வீட்டிற்கு வா என்று சொல்ல இங்கே வெங்கடேஷ் ரத்னாவின் பழைய துணிகள், சண்முகத்தின் குடும்ப போட்டோவை எரித்து கொண்டிருக்கிறான். இன்னைக்கு இந்த போட்டோ எரியுற மாதிரி ஒரு நாள் அந்த குடும்பமே எரியும் என வன்மத்தை காட்டுகிறான்.
அடுத்த நாள் காலையில் சண்முகம் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டிருக்க வெங்கடேஷ் வந்து நிற்க பரணியை தவிர்த்து யாருக்கும் விருப்பம் இல்லாமல் அவன் வீட்டிற்குள் நுழைகிறான். வைகுண்டமும் எல்லாருக்கும் விபூதி வைத்து விடுகிறார். ஆனால் வெங்கடேஷுக்கு விபூதி வைக்க மட்டும் தயக்கம் காட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.