/indian-express-tamil/media/media_files/2025/01/23/vuIjyKi3ytZUwWPnX2V6.jpg)
கார்த்திக் புது டாஸ்க் கொடுத்த சாமுண்டேஸ்வரி.. ரேவதியை மூட்டி விடும் சந்திரகலா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி சிவனாண்டி வீட்டிற்கு சென்று அவனை திட்டி விட்டு வந்த நிலையில் இன்று, வீட்டிற்கு வந்த சாமுண்டேஸ்வரி இதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட கூடாது.. தைரியமா இருக்கனும். எனக்கு என் பொண்ணு மேலயும் ட்ரைவர் மேலயும் நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள்.
அடுத்து கார்த்தியை தனியாக அழைத்து உன் மேல ஒரு பழி விழுந்திருக்கு.. அதோட உண்மையை நீ தான் கண்டு பிடித்து உன் மேல தப்பு இல்லனு நிரூபிக்கணும் என்று சொல்கிறாள். கார்த்தியும் சரி என்று சம்மதம் சொல்கிறாள். மறுபக்கம் சந்திரகலா மாயாவை பார்க்க வந்து இதெல்லாம் உன் வேல தானே என்று கேட்க மாயா ஆமாம் என்று சொல்கிறாள். கார்த்திக் ஒவ்வொரு முறையும் நல்ல பேர் எடுத்துட்டே போறான். நாளைக்கு கல்யாணத்தில் உங்கள பத்தி உண்மை தெரிந்தா சாமுண்டேஸ்வரி கார்த்தியை தாலி கட்ட சொல்ல வாய்ப்பிருக்கு.
சாமுண்டேஸ்வரி அப்படி ஒரு முடிவு எடுத்தா கூட ரேவதி ஒத்துக்க கூடாது. அவ மனசுல கார்த்தியை பத்தி சந்தேகத்தை விதைக்கும் என்று சொல்கிறாள். இதை தூரத்தில் இருந்து கவனித்த மகேஷ் சந்திரகலா சென்றதும் அவங்க சொல்றது உண்மை தான், ரேவதி மனதில் சந்தேகத்தை விதைக்கணும் என்று சொல்கிறான். இங்கே கார்த்திக் மயில் வாகனத்திடம் என்னை இந்த வீட்டை விட்டு வெளியே துரத்த நிறைய சதி நடக்குது, இதுல சந்திரகலாவுக்கும் பங்கு இருக்கு என்று சொல்கிறான்.
சந்திரகலா ரேவதியை அழைத்து சென்று இந்த ட்ரைவரை நம்பாத.. அக்கா சொன்னதும் உன் கழுத்தில மோதிரம் போட தயாராகிட்டான். உன் கழுத்தில் தாலி கட்டவும் திட்டம் போடலாம் என்று மூட்டி விட முயற்சி செய்கிறாள். பிறகு ரேவதிக்கு ஸ்டுடியோவில் இருந்து போன் செய்து நிச்சயதார்த்த ஆல்பம் ரெடியாகி விட்டதாக சொல்ல ரேவதி அதை வாங்க கிளம்ப சாமுண்டேஸ்வரி கார்த்தியை அழைத்து செல்ல சொல்கிறாள். சந்திரகலா ஏற்கனவே இவங்களை பத்தி ஊர் தப்பா சொல்லுது என்று சொல்கிறாள்.
உடனே சாமுண்டேஸ்வரி ஊர் உலகத்துல ஆயிரம் பேசுவாங்க.. அதை சரி செய்ய தானே மகேஷ்க்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்க போகுது என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உறியடி போட்டியில் ஜெயித்த சண்முகம்.. பேட்டி எடுக்க சூழ்ந்த பத்திரிக்கைகள் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி உறியடி போட்டியில் கலந்து கொள்ள தயாரான நிலையில் இன்று, சௌந்தரபாண்டி உறியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு உறியடிக்க சென்று கடைசியில் பாண்டியம்மா மண்டையில் அடித்து விடுகிறார். இதனை தொடர்ந்து இந்த ஊரில் உறியடி போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க யாருமே இல்லையா என்று கேள்வி எழுப்ப வெட்டுக்கிளி ஏன் இல்ல.. என் அண்ணன் இருக்காரு என்று சண்முகத்தை கோர்த்து விடுகிறான்.
சண்முகம் அமைதியா இருடா என்று சொல்ல வெட்டுக்கிளி போட்டியில் கலந்து கொண்டு அண்ணிக்கு தங்க செயினை ஜெயித்து கொடு என்று சொல்ல பரணிக்காக போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறான். தான் ஜெயிக்காத இந்த போட்டியில் சண்முகம் ஜெயிக்க கூடாது என நினைக்கும் வெங்கடேஷ் கயிறு இழுக்கும் இடத்தில நின்று கொண்டு சண்முகம் சரியாக அடிக்க வரும் நேரத்தில் பானையை இழுத்து சதி செய்கிறான்.
இரண்டு முறை இப்படியே மிஸ்ஸாக மூன்றாவது முறை சரியாக பானையை அடித்து வெற்றிவாகை சூடுகிறான். பானையில் இருந்த தங்க செயினும் பறந்து போய் பரணி கழுத்தில் விழுகிறது. பிறகு சண்முகத்திற்கு விழா குழுவினர் கோப்பை கொடுக்க சண்முகம் அதை முன்னாள் கமிட்டி தலைவர் கையால் வாங்க ஆசைப்படுவதாக சொல்லி சௌந்தரபாண்டி கையால் வாங்குகிறான். பிறகு பத்திரிகையாளர்கள் சண்முகத்தை பேட்டி எடுக்க சூழ்ந்து கொள்கின்றனர்.
உறியடிச்சதுக்காக இத்தனை பேர் பேட்டி எடுக்க வந்து இருக்கீங்க என்று கேட்க அவர்கள் இல்ல உங்க ஐடியாலஜி பிடித்து போய் பேட்டி எடுக்க வந்திருக்கோம் என்று சொல்கின்றனர். அதாவது மாப்பிள்ளைகளை உங்க வீட்டில் வச்சிட்டு இருக்கீங்க.. அந்த முயற்சிக்கு என்ன காரணம் என்று கேட்க என் தங்கச்சிங்க என் கண்ணு முன்னாடியே நல்லபடியாக வாழனும்.. அதுக்காக தான் இந்த முடிவு என்று சொல்கிறான்.
முத்துப்பாண்டி நான் எங்க வீட்டை விட இங்க ரொம்ப சந்தோசமாக இருக்கேன். என்னை ரொம்ப மரியாதையோடு தான் நடத்துறாங்க என்று சொல்கிறான். இதை பார்த்து வெங்கடேஷ் நானும் சந்தோசமாக தான் இருக்கேன். என் பொண்டாட்டி கூட வாழனும் என்பதற்காக வாத்தியார் வேலையை விட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல இதை கேட்டு ரத்னா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.