முத்துபாண்டியை பழி தீர்க்கும் வெங்கடேஷ்.. குடும்பத்தை கட்டி காப்பானா சண்முகம்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் சூழ்ந்த நிலையில் இன்று, பத்திரிகையாளர்கள் எப்படி உங்களால் இப்படி கூட்டு குடும்பமாக இருக்க முடியுது? உங்க வீட்டு மாப்பிள்ளைகள் சந்தோசமாக இருக்காங்களா என்று கேள்வி எழுப்ப முத்துப்பாண்டி என் வீட்டை காட்டிலும் இங்க நான் சந்தோசமாக தான் இருக்கேன் என்று சொல்கிறான். வெங்கடேஷும் வேற வழியில்லாமல் சந்தோசமாக இருப்பதாக பொய் சொல்கிறான்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்க முடியும்? அடுத்த வருஷ பொங்கலுக்கு நாங்க திரும்ப இந்த ஊருக்கு வருவோம். அப்போதும் உங்க குடும்பம் இதே மாதிரி ஒற்றுமையா இருக்கா என்று பார்க்கலாம் என்று சொல்லி கிளம்புகின்றனர். இவர்கள் இப்படி சொன்னதை கேட்டதும் சண்முகம் இந்த குடும்பம் எப்பவும் இப்படியே இருக்கனும். குடும்பம் கலையாமல் பார்த்துக்கணும் என முடிவெடுக்கிறான்.
வீட்டிற்கு வந்து பரணியிடம் இது பற்றி பேச அவளும் நான் உனக்கு துணையாக இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு முத்துப்பாண்டி எல்லாரிடமும் நாளைக்கு நான் சீக்கிரம் போகணும்.. டிஜிபியுடன் மீட்டிங் இருக்கு என்று சொல்கிறான். அடுத்த நாள் காலையில் முத்துப்பாண்டி வாக்கிங் கிளம்ப அப்போது வெங்கடேஷையும் வர சொல்லி கூப்பிடுகிறான். வெங்கடேஷ் நான் எதுக்கு அதெல்லாம் வரணும்? நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்ல முத்துப்பாண்டி கலாய்த்து விடுகிறான்.
இதனால் கடுப்பாகும் வெங்கடேஷ் முத்துபாண்டியை பழி தீர்க்க பாத்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டு சீக்கிரம் போக வேண்டும் என்று சொன்ன முத்துபாண்டியை போக விடாமல் தாமப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் நிச்சயதார்த்த போட்டோ வாங்க சென்ற நிலையில் இன்று, போட்டோவை வாங்க செல்வதற்கு முன்பாக இன்விடேஷனை தேர்வு செய்ய செல்கின்றனர், ரேவதிக்கு எந்த டிசைன் தேர்வு செய்வது என்ற குழப்பம் உருவாக கார்த்தியை தேர்வு செய்ய சொல்கிறாள். கார்த்தி ஒரு டிசைனை தேர்வு செய்து கொடுக்கிறான்.
அடுத்ததாக நிச்சயதார்த்த போட்டோவை வாங்க செல்கின்றனர், அப்போது அந்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் ஷாக் ஆகிறான், டாக்டரின் மகள் சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான். அடுத்து ரேவதி போட்டோவுடன் நேராக மகேஷ் வீட்டிற்கு செல்கிறாள், அப்போது மாயா நிச்சயதார்த்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
ரேவதி கிளம்பியதும் மகேஷிடம் கார்த்தி மட்டும் அந்த போட்டோவை பார்த்தா நான் மாட்டிக்கொள்வேன் என்று சொல்கிறாள். இங்கே ரேவதி வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரியிடம் நிச்சயதார்த்த போட்டோவை காட்டுகிறாள். இந்த சமயத்தில் மாயா வீட்டிற்கு வருகிறாள். சாமுண்டேஸ்வரி என்ன மாயா திடீரென வந்து இருக்கீங்க என்று கேட்க ஸ்வீட் செய்தேன், உங்களுக்கும் கொண்டு வந்தேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைகிறாள்.
பிறகு ரேவதியிடம் அந்த நிச்சயதார்த்த போட்டோவை கொஞ்சம் கொடுமா பார்த்துட்டு தரேன் என்று சொல்கிறாள். ரேவதியிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டு அவளை திசை திருப்பி தனது போட்டோக்களை மட்டும் எடுத்து மறைத்து விடுகிறாள். வெளியே வந்த அவள் எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டோவை வீசி விட்டு நிம்மதியுடன் செல்கிறாள்.
அதை தொடர்ந்து பாதி எறிந்த போட்டோ காற்றில் பறந்து வந்து கார்த்தியின் கால் அருகே விழ அதை எடுத்து பார்த்த கார்த்திக் இது அந்த போட்டோ தானே என்று சந்தேகம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.