மாட்டிக் கொண்டதும் மாயா போட்ட டிராமா.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மயில்வாகனத்திற்கு கத்திக்குத்து விழுந்த நிலையில் இன்று, கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில் கம்பி கிழித்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்து விடுகிறான். அடுத்ததாக கார்த்திக் மகேஷ் வீட்டிற்கு வந்து பார்க்க அங்கு வீட்டில் யாரும் இல்லை. அதன் பிறகு ரேவதிக்கு ஒரு போன் கால் வருகிறது.
அந்த போன் காலில் மாயா ஹாஸ்பிடல் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாக சொல்ல ரேவதி அதிர்ச்சியாகி ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறாள். ஹாஸ்பிடலில் மாயா தற்கொலைக்கு முயன்றதாக சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு மாயாவிடம் விசாரிக்க என்னையும் என் கொழுந்தனையும் சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்க. அத என்னால ஏத்துக்க முடியல, அதனாலதான் இப்படி பண்ணதாக டிராமா போடுகிறாள்.
கார்த்திக் மாயா திட்டம் போட்டு தான் இப்படி செய்திருக்கிறாள். இப்போ எதுவும் சொல்ல முடியாது என மாயா, மகேஷ் கள்ளத்தொடர்பு குறித்த உண்மையை சொல்லாமல் அமைதியாகி விடுகிறான். இதைத்தொடர்ந்து கார்த்திக்கு தாத்தா ராஜா சேதுபதியிடம் இருந்து போன் கால் வருகிறது. உடனே கார்த்தி மற்றும் மயில்வாகனம் என இருவரும் கிளம்பி ராஜா சேதுபதியை சந்திக்கச் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெங்கடேசுக்கு வேலை போட்டு கொடுத்த ரத்னா.. பரணியை அவமானப்படுத்த வந்த தோழி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷால் சண்முகம், பரணி இடையே மோதல் உருவாகி பரணி வெளியே வந்து படுத்து தூங்கிய நிலையில் இன்று பரணி சண்முகத்திடம் சண்டை போட்டு வெளியே வருவதை ரத்னா கவனிக்கிறாள். அடுத்த நாள் வெங்கடேஷ் வெளியே தூங்கி கொண்டு இருப்பதை பார்த்த பரணி வருத்தம் அடைகிறாள். வெங்கடேஷிடம் மன்னிச்சிடுங்க என்னால உங்களுக்கு உதவி பண்ண முடியல என்று பேசிக்கொண்டு இருக்க ரத்னா இதை கேட்கிறாள்.
பிறகு ரத்னா இப்ப என்ன இவருக்கு வேலை தானே போட்டு கொடுக்கணும்.. நானே போட்டு தரேன் ஸ்கூலுக்கு வர சொல்லுங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு சண்முகம் பரணி இடையே சண்டை மறைந்து ரொமான்ஸ் உருவாகிறது. வெங்கடேஷ் நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷத்தில் இருக்க சௌந்தரபாண்டி வீட்டுக்கு ஸ்ருதி என்ற பெண் பரணிக்கு விருது கொடுத்த இருப்பதாகவும் அவளை பார்க்க வந்ததாகவும் சொல்கிறாள்.
அதை கேட்ட, சௌந்தரபாண்டி அவ வெறும் பையனை கட்டிக்கிட்டு அந்த வீட்ல இருக்கா.. அங்க போ என்று அலுத்துக் கொள்கிறார். பிறகு ஸ்ருதி எனக்கும் பரணியை பிடிக்காது.. அவளை அவமானப்படுத்த தான் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்கிறாள். பிளாஷ் கட் பண்ற ஓபன் ஆகிறது பரணி கல்யாணம் நடந்து முடிய அங்கு வந்திருந்த ஸ்ருதி பரணியை என்ன ஒரு பட்டிக்காட்டானை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கிண்டல் அடித்தது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.