தாத்தாவை பார்க்க வந்த கார்த்திக்.. மயில்வாகனத்துக்கு தெரிய வந்த உண்மை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க கிளம்பி வந்த நிலையில் இன்று, ராஜா சேதுபதி உடல்நிலை சரியில்லாமல் இருக்க டாக்டர் அவரை பரிசோதனை செய்து பயப்படுற மாதிரி எதுவும் இல்லை.. மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியா போயிடும் என சொல்லி விட்டு செல்கிறார்.
பிறகு கார்த்திக் வந்திருக்கும் தகவல் அறிந்து விருமன் உட்பட எல்லோரும் வீட்டு முன்பு கூடி விடுகின்றனர். ராஜராஜன்னு கூட்டிட்டு வரேன் கோவில் திருவிழாவை நடத்துறேன்னு சவால் விட்டயே என்ன ஆச்சு எங்க என்று கேட்கிறான் விருமன். கார்த்திக் கண்டிப்பாக கூட்டிட்டு வரேன் அதுக்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருக்கிறேன் இப்போ தாத்தா உடம்பு முடியாம இருக்காரு என்று சொல்லி பேச ஊர்காரர்கள் கார்த்திக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
மயில்வாகனம் இதையெல்லாம் பார்த்துவிட கார்த்திக் குறித்த உண்மையை அறிகிறான். பிறகு கார்த்தியிடம் யாருடா நீ என்று ராஜராஜன் என்னுடைய மாமா தான் நான் ராஜா சேதுபதியோட பேரன் என்ற விஷயத்தை உடைக்கிறான். நீ அந்த வீட்டோட மருமகன் அப்படி இருக்கும் போது நீ எதுக்கு டிரைவராக நடிச்சுக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்க இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் என்ற விஷயத்தை சொல்கிறான்.
பிறகு மயில்வாகனத்திடம் என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் அந்த வீட்ல சொல்லக்கூடாது என பேசி கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான். வீட்டுக்கு சென்றதும் எங்க போயிருந்தீங்க என்ற விசாரிக்க பக்கத்தில் சென்று இருந்ததாக பொய் சொல்லி சமாளிக்கின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரணியை அவமானப்படுத்த சௌந்தரபாண்டியுடன் கூட்டு சேரும் தோழி.. நடக்கப் போகும் விபரீதம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை பரணியின் தோழி சுருதி பார்க்க வந்திருந்த நிலையில் இன்று, பிளாஷ் கட்டில் கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்த சுருதி அதை பரணியிடம் கொடுத்து நீ என்ன இந்த வேட்டி கட்டணுவன் கூடவா வாழற உனக்கெல்லாம் இவன் சரியா பொருத்தம் இல்ல என்று சொல்கிறாள். மேலும் என் கல்யாணத்துக்கு நீ மட்டும் வா, உன் புருஷனை கூட்டிட்டு வராத என்று சொல்கிறாள்.
இதை கேட்டு, கோபமான பரணி பத்திரிக்கையை தூக்கி அவள் முகத்தில் வீசி திட்டி அனுப்பிய விஷயத்தை சொல்கிறாள். என்ன அவமானப்படுத்தின பரணியை அவமானப்படுத்த தான் இந்த விருது விழாவிற்கு கூப்பிட வந்திருக்கேன். நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவமானப்படுத்தலாம் என்று சௌந்தரபாண்டியை கூட்டு சேர்கிறாள். அதைத்தொடர்ந்து சுருதி பரணியை சந்தித்து விருது விழாவிற்கு வரவேற்கிறாள்.
டாக்டருக்கு படிச்சிட்டு காசு வாங்காம ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கிற உனக்கு தான் இந்த விருது கொடுக்கிறாங்க. அதனால நீ கண்டிப்பா வரணும் உன் புருஷனையும் கூட்டிட்டு வா என்று சொல்ல பரணிக்கு ஸ்ருதி மீது ஒரு சின்ன சந்தேகம் உருவாகிறது. அதன் பிறகு சண்முகம் வீட்டிற்கு வரும் சௌந்தரபாண்டி என் பொண்ணு விருது வாங்க போறா. அவள படிக்க வச்சது நான் தான் அதனால அந்த விருதை நானே வாங்கிக்கிறேன். நீங்க யாரும் வரக்கூடாது என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
இதனை தொடர்ந்து வைகுண்டம் என் மருமகள் விருது வாங்குறா.. இதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல அவன் யாரு? நாம எல்லாரும் குடும்பத்தோட சென்னையில் நடக்கிற விருது விழாவுக்கு போறோம் என்று சொல்ல இதை வெளியில் இருந்து ஒட்டு கேட்ட சௌந்தரபாண்டி தன்னுடைய திட்டம் சரியாக நிறைவேறியதாக நினைத்து சிரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.