/indian-express-tamil/media/media_files/2024/11/12/KNPGtSqU4rUro0z6ildA.jpg)
பத்திரிக்கையில் மாறிய பெயர்.. கார்த்தியை சிக்க வைக்க பிளான் போட்ட சந்திரகலா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம். சீரியலின் நேற்றைய எபிசோடில் தாத்தாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் சாமுண்டேஸ்வரி குடும்பத்தை சமாளித்த நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு பேசி கொண்டிருக்கும் போது ஒருவன் ரேவதியின் கல்யாண பத்திரிக்கை தயாராகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்கிறான். இதை பார்த்த சந்திரகலா உனக்கு இப்போ இருக்குடா ஆப்பு என மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள்.
அடுத்ததாக ராஜராஜன் பத்திரிகையை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்து வரலாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம் அப்படியே செய்யலாம் என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் சந்திரகலா பத்திரிக்கை எப்படி வந்து இருக்குனு பார்க்கணும் என்று சொல்லி பிரித்து பார்க்கட்டுமா என அனுமதி கேட்கிறாள்.
சாமுண்டீஸ்வரி இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேட்குற பிரித்து பாரு என்று சொல்ல சந்திரகலா பிரித்து பார்த்து மகேஷ் என்ற பெயருக்கு பதிலாக கணேஷ் என்று இருக்கிறது. ட்ரைவர் தான் அந்த கணேஷ் போல, ரேவதி கழுத்தில் தாலி கட்ட தான் இப்படி செய்து இருக்கிறான் என்று சொல்ல ரேவதி ஷாக் ஆகிறாள்.
கார்த்திக் கணேஷ் என் பெயர் இல்லை என்று சொல்ல சந்திரகலா அப்படினா உன் பேர் என்ன? இதுவரைக்கும் நீ பேரே சொன்னது இல்லை என்று பிரச்சனை செய்ய கார்த்திக் அமைதியாக இருக்கிறான். சந்திரகலா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்க மயில்வாகனம் அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான் கூப்பிடுவாங்கலாம். அவன் பேர் ராஜா என்று சொல்கிறான்.
அடுத்து ரேவதி மதர்க்கு போன் செய்து குழந்தை தீபாவை குறித்து விசாரிக்கிறாள். மதரும் குழந்தையை சீக்கிரம் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க, அவளும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாள் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெங்கடேஷுக்கு சவால் விடும் அறிவழகன்.. சௌந்தரபாண்டிக்கு பரணி கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வந்து சென்றதை தொடர்ந்து வைகுண்டம் பரணி விருது வாங்கும் விழாவிற்கு நாம எல்லாரும் போகணும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று, ரத்னா அறிவழகனுக்கு போன் செய்து நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன். சென்னை போறேன், ஒழுங்கா ஸ்கூலை பார்த்துக்கோ என்று சொல்கிறாள். அறிவழகன் அப்படியா அப்போ ஒரு நாள் ப்ரின்சிபலா இருந்து பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.
பிறகு அறிவழகன் நானும் சென்னை வரவா என்று கேட்க ரத்னா நீ என்ன என் பேமிலில ஒருத்தனா? நீ எதுக்கு வரணும் என்று சொல்லி விடுகிறாள். வெங்கடேஷ் இவன் யார்கிட்ட பேசிட்டு இருக்கான் என்று குழப்பமடைந்து போனை பார்க்க ரத்னாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறான். நீ எதுக்கு டா என் பொண்டாட்டிக்கு போன் செய்து பேசுற என பிரச்சனை செய்ய அறிவழகன் நான் ஒன்னும் போன் பண்ணல.. அவ தான் போன் பண்ணி ஒரு நாள் ப்ரின்ஸிபலா இருந்து ஸ்கூலை பார்த்துக்க சொன்னா என்று சொல்கிறான்.
வெங்கடேஷ் நீ பிரின்சிபல் இல்ல பியூன் என்று சொல்ல அறிவழகன் நானும் உங்க கூட சென்னை வந்து காட்டுறேன். அதுவும் ரத்னாவுக்கு மேட்ச்சா ட்ரெஸ் போட்டுட்டு வரேன் என்று சவால் விடுகிறான். அடுத்து வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார பரணி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். கனி என்ன அண்ணி விருது வாங்க போறீங்க என்று பேச உங்களுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்புகிறாள். சௌந்தரபாண்டி வந்து அவமானப்படுத்தி விட்டு சென்ற கதையை சொல்ல பரணி அதனால் தான் எல்லாரும் போக வேண்டாம்னு நினைக்கிறேன் என்று தனியாக சென்று வருவதாக சொல்கிறாள்.
அடுத்த நாள் பரணியை அவனமானப்படுத்த ஸ்ருதி எல்லா வேலைகளையும் பார்க்க சௌந்தரபாண்டி வித்தியாசமான கெட்டப்பில் வந்து இறங்குகிறார். பரணி தனியாக வந்து இறங்க அதை பார்த்து இருவரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.