வெங்கடேஷின் மிரட்டல்.. ரத்னா எடுத்த அதிர்ச்சி முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது பேருக்கு எழுதி கொடுத்த கையெழுத்து வாங்க திட்டமிட்ட நிலையில் இன்று, வெங்கடேஷ் ரத்னாவிடம் டாக்குமென்டை கொடுத்து ஸ்கூலை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க கையெழுத்து போட சொல்கிறான். ரத்னா கையெழுத்து போட முடியாது என மறுக்க வெங்கடேஷ் உனக்கு இத விட்டா வேற வழி இல்ல என்று சொல்கிறான்.
எனக்கு ஒரு பிரச்சினைனா என் அண்ணன் வந்து நிற்பான் என சொல்ல வெங்கடேஷ் பரணி என்ன பண்ணுவாங்க? கழுத்தைப் பிடித்து கொண்டு வந்து இங்க தள்ளிட்டு போவாங்க.. உன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்குத் தெரியும் என சொல்கிறான். அதன் பிறகு பரணிக்கு உடம்பு முடியாமல் போக சண்முகமே டாக்டராக மாறி பரணிக்கு ரொமான்டிக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறான்.
அதன் பிறகு மூணு வேலை சுடுதண்ணி ரசம் சாதம் தான் சாப்பிடணும் என பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுக்கிறான். இதைத் தொடர்ந்து ரத்னா வெங்கடேஷ் சொன்ன வார்த்தைகளால் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்மாவை எதிர்க்கும் ரேவதி.. அப்பாவுக்கு சொன்ன அட்வைஸ், ஒட்டு கேட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தனக்கு எதிரே நின்று மீசையை முறுக்கியவனின் மீசையை வழித்து விட்ட நிலையில் இன்று, ரேவதி சாமுண்டீஸ்வரி செய்வதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு நீங்க எதுக்கு அவங்களுக்கு அடிபணிந்து போறீங்க அம்மாவை இது கேள்வி கேட்டு அவங்கள திருத்துங்கப்பா என்று எடுத்து சொல்ல ராஜராஜன் எவ்வளவு முயற்சி பண்ணியாச்சு என தனது வருத்தத்தை பதிவு செய்கிறார்.
அதன் பிறகு ஸ்வேதா கார்த்தியிடம் ஓடி வந்து நான் ஒரு பாட்டு பாட பிராக்டிஸ் பண்ணி இருக்கேன். நான் பாடி காட்டுறேன் எப்படி இருக்குன்னு கேட்டு சொல்லுங்க என பாடலை பாட கார்த்திக் மெதுவா பாடுங்க உங்க அம்மா வீட்ல தான் இருக்காங்க.. அவங்க காதுக்கு கேட்டா பிரச்சனை ஆகிடும் என்று சொல்கிறான். அடுத்து சிவனாண்டி தாத்தா ராஜசேதுபதிக்கு எதிரான விருமனை கூட்டி வந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டம் போடுகிறான்.
இந்த வீட்டுக்குள்ள போகும்போது கொஞ்சம் கம்மிதான் போகணும் ஏன்னா இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு ஆம்பளைய பார்த்தாலே பிடிக்காது. அதுக்கேத்த மாதிரி நடந்து கொள் என்று சொல்கிறான். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் போடுவதை கார்த்திக் மறைந்திருந்து பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.