Advertisment

கணவனை பார்க்க சென்ற மனைவி: அண்ணன் தங்கையை வாழ விடுவரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

அண்ணனுக்கு தெரியாமல் தங்கை தனது கணவனை பார்க்க சென்றதால் அண்ணா சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Smart Creds

ரேவதியை வைத்து சாமுண்டீஸ்வரி சொத்துக்கு ஸ்கெட்ச் போடும் மாயா.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் கார்த்திக் என இருவரும் மாயா மற்றும் மகேஷை பார்த்து விட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று, மாயா வாந்தி எடுக்க அப்பாவி போல் இருந்த மகேஷ் தனது கெட்டப்பை களைத்து வில்லன் போல் மாறி என்ன கர்ப்பமா என்று சைகையில் கேட்க மாயாவும் ஆமாம் என்று சொல்கிறாள்.

அடுத்து இருவரும் ஹாஸ்பிடல் வர டாக்டர் இவங்களுக்கு இதுவே வேலையா போச்சு.. அடிக்கடி அபார்ஷன் பண்ணுறது உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல என்று வார்னிங் கொடுத்து அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சாமுண்டேஸ்வரி ப்ரோக்கரை வர வைத்து மாப்பிள்ளை போட்டோக்களை பார்க்க கார்த்திக் யாருமே நல்லா இல்ல.. அவங்க எவ்வளவு அழகா இருக்காங்க.. அவங்களுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை இருக்க வேண்டாவா என்று சொல்கிறான்.

அடுத்து சாமுண்டேஸ்வரி வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்.. நல்ல அஸ்தஸ்துல இருக்க குடும்பமாகவும் இருக்கணும் என்று கண்டிஷன் போடுகிறாள். இங்கே அபார்ஷன் போஷன் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாயா நீ இப்படியே அப்பாவி போலவே நடிக்கணும்.. அப்போது தான் அந்த வீட்டு சொத்தை அடிக்க முடியும் என்று மகேஷ்க்கு ஆர்டர் போடுகிறாள். அடுத்து மகேஷ் ரேவதிக்கு போன் செய்து அண்ணி உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க என்று சொல்லி போனை வைக்கிறான்.

Advertisment
Advertisement

இதை தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி முருகன் போட்டோ முன்னாடி உட்கார்ந்து கார்த்தியின் வாழ்க்கையை பற்றி பேசி வருத்தப்படுகிறாள். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வர வேண்டும் என்று வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணனுக்கு தெரியாமல் முத்துபாண்டியை பார்க்க வந்த இசக்கி.. சௌந்தரபாண்டியால் சண்முகத்துக்கு வந்த ஞானம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி வீராவை கூப்பிட்டு உன்னுடைய பிரச்னையை தீர்த்து வைக்க ஒருதரால் மட்டும் தான் முடியும் என்று சொல்லிய நிலையில் இன்று, பரணி இசக்கி பேசினால் முத்துப்பாண்டி கண்டிப்பாக கையெழுத்து போடுவான்.. பொண்டாட்டி பேச்சை தட்ட மாட்டான் என்று சொல்ல வீரா இசக்கியிடம் உதவி கேட்கிறாள்.

அடுத்த நாள் காலையில் முத்துபாண்டிக்காக சட்டினியும் பணியாரமும் செய்து எடுத்து கொண்டு சண்முகத்திற்கு தெரியாமல் வீராவும் இசக்கியும் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். இங்கே முத்துப்பாண்டி முப்பிடாதியிடம் சண்முகம் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்கிறான். 
இதை தொடர்ந்து இசக்கி மற்றும் வீரா ஸ்டேஷனுக்கு வர முப்பிடாதி உள்ளே விட கூடாதுனு ஐயா சொல்லி இருக்காரு என்று தடுக்க இருவரும் அவனை தள்ளி விட்டு உள்ளே வருகின்றனர். இசக்கி உங்களுக்கு என் மேலே பாசமே இல்லை என்று ஆரம்பிக்க முத்துப்பாண்டி அதெல்லாம் தேவையில்லை என்ன விஷயம் அதை மட்டும் சொல்லு என்று கேட்கிறான்.

என் தங்கச்சிக்காக கையெழுத்து போடணும் என்று சொல்ல முப்பிடாதி நேத்து சண்முகம் வந்து போனதும் ஐயா கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சு என்று சொல்கிறான். பிறகு இசக்கி மீண்டும் உங்களுக்கு என் மேல் பாசமே இல்ல.. உங்களுக்காக நைட் எல்லாம் கண் முழிச்சி கஷ்டப்பட்டு இந்த பணியாரத்தை செய்து வந்தேன் என்று செய்முறையை சொல்ல முத்துப்பாண்டி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் இசக்கி அங்கேயே வைத்து விட்டு வருகிறாள்.

இவர்கள் கிளம்பி வந்ததும் முத்துப்பாண்டி அதை ஆசையாக எடுத்து சாப்பிட்டு சந்தோசப்படுகிறான். மறுபக்கம் சண்முகம் வண்டியில் சென்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி வழி மறித்து உன் தங்கச்சியை இங்கே இருந்து கூட்டிட்டு போய் நீயும் அவளை வேலைக்காரியாக தானே வச்சிட்டு இருக்க.. என் வீட்டில் செய்த அதே வேலையை தானே இப்போ உன் வீட்டில் செய்துட்டு இருக்கா.. வாய்க்கு ருசியா ஆக்கி போட தானே பொம்பளைங்க என்று பேசுகிறார்.

சண்முகம் சௌந்தரபாண்டி பேசியதை வைத்து நான் செய்தது புரட்சி இல்லை.. இசக்கிக்கு ஒரு நல்ல வாழக்கையை ஏற்படுத்தி கொடுக்கணும் என்று முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment