சௌந்தரபாண்டிக்கு எதிராக திரும்பிய சனியன்? கூடிய பஞ்சாயத்தில் நடக்கப்போவது என்ன?
அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியனின் பேரனை திட்டம் போட்டு சண்முகம் கடத்திய நிலையில் இன்று, வீரா இரண்டு சாமியாரோட உங்க பேரனை பார்த்தேன் என்று சொல்லி போட்டோவை காட்ட சனியன் அதிர்ச்சி அடைகிறான். பிறகு அங்கு பரணி வந்து என்னாச்சு என்று கேட்க சனியன் என் பேரனை காணவில்லை என்று சொல்ல சண்முகம் கிட்ட சொன்னா அவன் உதவி பண்ணுவான் என்று சொல்கிறாள்.
நீங்க சண்முகம் கிட்ட உதவி கேப்பீங்களா என்று கேட்க, என் பேரனுக்காக உயிரையே கொடுப்பேன் என்று சொல்ல சனியனை சண்முகத்திடம் அழைத்துச் செல்கின்றனர். சண்முகம், உடன்குடி, வெட்டுக்கிளி என மூவரும் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்க, சனியன் ஓடி வந்து உதவி கேட்க சண்முகம் அவனுங்களா மோசமானவங்களாச்சே.. பேரனை கொன்னுடுவானுங்க என்று சொல்ல சனியன் அழுகிறான்.
பிறகு உன் பேரனை நான் காப்பாத்துறேன் என்று சண்முகம் கிளம்ப சூடாமணி தடுத்து நிறுத்தி என் புள்ளைங்க கஷ்டப்பட இவனும் ஒரு காரணம். இவனோட பேரனை நீ எதுக்கு காப்பாத்தணும் என்று சொல்ல சனியன் சூடாமணியிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறான். அதன் பிறகு என் அம்மா உத்தமினு இந்த ஊர் பஞ்சாயத்துல எல்லார் முன்னாடியும் சொன்னா நான் உன் பேரனை காப்பாத்துவேன் என்று சண்முகம் சொல்கிறான்.
சனியன் சம்மதம் சொல்ல பிறகு பஞ்சாயத்து கூட சௌந்தரபாண்டி மண்ணெண்ணெய் கேனுடன் பஞ்சாயத்துக்கு வருகிறார். உண்மைய நிரூபிக்கலனா சூடாமணி கொளுத்திப்பேனு சொன்னாலே அதுக்குத்தான் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருப்பதாக சௌந்தரபாண்டி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்யாணத்துக்கு ஓகே சொன்ன மாயா.. ரகுராமுக்கு தெரிய வருமா உண்மை?
சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சீனு மலை உச்சியில் ஏறி மாயாவுக்கு வீடியோ கால் செய்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, இங்கே ரகுராம் சீனு எங்கே என்று கேட்க, பத்மா பார்வதி ஜானகி என மூவரும் அமைதியாக இருக்கின்றனர். இவங்க அமைதியா இருக்கிறத பாத்தா ஏதோ தப்பா தெரியுது என்று ரமணி சந்தேகப்படுகிறாள்.
அடுத்ததாக சிவராமன் கேம்ப் பயிற்சியாளர் கோகிலாவுக்கு போன் செய்து மாயா அல்லது தனம் யாராவது பக்கத்தில் இருந்தால் போனை கொடுக்க சொல்கிறாள். பிறகு தனத்திடம் ஃபோனை கொடுக்க தனம் அழுது கொண்டே பேச சிவராமன் நாங்க அங்க கிளம்பி வருகிறோம் என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர். இங்கே மலை உச்சிக்கு வந்த மாயா சீனுவை தடுத்து நிறுத்தி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல கோவிலில் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
தனம் சிவராமன் மற்றும் மணிவண்ணனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு பத்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“