Advertisment

வாழ்க்கை பறிபோகும் பயத்தில் தீபா... மாமனாரை பழிவாங்கும் மருமகன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Anna KD And Idhayam

கார்த்திகை தீபம் - அண்ணா - இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

பல்லவி செய்த விஷயம்.. கார்த்திக்கிடம் கோபமான தீபா, நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவி தீபாவிடம் எமோஷனல் டிராமா போட்டு நம்ம வைத்த நிலையில் இன்று, எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா பல்லவியை வைத்து ஏதாவது செய்யலாம் என்று பிளான் போட்டு காபியை அவளிடம் கொடுத்து எல்லாருக்கும் எடுத்திட்டு போய் கொடு, சும்மா இருந்ததால் செய்ததாக சொல்லு என அனுப்பி வைக்க அவளும் எல்லாருக்கும் காபி கொடுக்கிறாள்.

கார்த்திக் நீங்க எதுக்கு இதையெல்லாம் செய்யறீங்க என்று கேள்வி எழுப்ப இல்ல வீட்டில சும்மா தானே இருக்கோம் அதனால் செய்ததாக சொல்கிறாள். அதோடு கார்த்திக் உங்களுக்கு எதுக்கு கஷ்டம் என்று சொல்ல எனக்காக நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்யறீங்க, உங்களுக்காக நான் இதை கூட செய்ய மாட்டேனா என்று பேசி அங்கிருந்து வருகிறாள்.

இதை பார்த்த தீபாவும் மீனாட்சியும் பல்லவியை வழி மறித்து நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்துட்டு இருக்க? பாட வந்த நீ அந்த வேலையை மட்டும் பார்த்திட்டு கிளம்பு என சொல்கின்றனர். இல்ல ஐஸ்வர்யா அக்கா காபி போட நின்னுட்டு இருந்தாங்க. அவளுக்கு காபி போட தெரியாதுன்னு சொன்னாங்க. நான் தீபா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவங்க தீபா கிச்சனுக்குள் வர கூடாதுனு கண்டிஷன் இருக்கு சொன்னதாக சொல்ல தீபா அதெல்லாம் இப்போ இல்ல, நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்பு என வார்னிங் கொடுக்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக கார்த்தியின் ரூமுக்குள் வரும் தீபா உங்க கிட்ட பேசணும், பல்லவி எப்போ போவா? அவளுக்கு எப்போ ரெக்கார்டிங் என்று மிரட்டலாக கேட்க கார்த்திக் என்னங்க மிரட்டுறீங்க என்று கேட்கிறான். இல்ல அவ அம்மாவை பார்க்கணும் போல இருக்குனு சொல்லிட்டு இருக்கா என்று சொல்ல 1 வாரம் ஆகுமே என்று கார்த்திக் பொய் சொல்லி விளையாட தொடங்க தீபா நாளைக்கு தானே ரெக்கார்டிங் அப்புறம் எதுக்கு ஒரு வாரம் என கோபப்பட இப்படி ஏதாவது நடந்தா தான் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கிறீங்க. இப்படியே இருங்க இது தான் நல்லா இருக்கு என்று சொல்லி வெளியே செல்ல பல்லவி எப்போ போவான்னு சொல்லிட்டு போங்க என்று திரும்பவும் அதட்ட நாளைக்கு கிளம்பிடுவாங்க என்று சொல்லி செல்கிறான்.

மறுபக்கம் ஐஸ்வர்யா நாளைக்கு எப்படி நடந்துக்கணும், எப்படி பாடணும் என பல்லவிக்கு ஏதோ சொல்கிறாள். இளையராஜா கார்த்திக்கு போன் செய்து நாளைக்கு ஏற்பாடு பண்ணிடலாமா? பல்லவி வந்துடுவாங்களா? என்று கேள்வி கேட்க கார்த்திக் ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த சண்முகம்.. சௌந்தரபாண்டி எடுத்த சபதம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயரை வைக்க வைகுண்டம் எமோஷனலான நிலையில் இன்று கோவிலில் இருந்து ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு வரும் சௌந்தரபாண்டி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயர் வைத்திருப்பதையும் போர்டில் பரணி சண்முகம் என பெயர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி  அடைகிறார். அதனை தொடர்ந்து சனியன் அவரது பங்கிற்கு ஏற்றி விட உள்ளே வந்த அவர் பரணியிடம் எதுக்கு சூடாமணி பெயர் என்று கேள்வி எழுப்புகிறார்.

உடனே பரணி அது என்னுடைய அத்தையோட பெயர் அதனால் வச்சிருக்கேன் என்று சமாளித்து விடுகிறாள். பிறகு ஹாஸ்பிடலை திறந்து வைக்க பரணி வைகுண்டத்தை கூப்பிட சண்முகம் நம்ம அம்மாவை அசிங்கப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பின சௌந்தரபாண்டி கையாலயே இந்த ஹாஸ்பிடலை திறந்து வைக்க வேண்டும் என சொல்ல வைகுண்டமும் சம்மதிக்கிறார்.

அதன் பிறகு எல்லாரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை வைத்து ஹாஸ்பிடலை திறந்து வைக்க அங்கிருந்தவர்கள் பிரசிடெண்ட் சண்முகம் சொன்ன மாதிரியே மனைவியை வைத்து ப்ரீ ஹாஸ்பிடல் திறந்துட்டாரு என வாழ்த்தி பாராட்டுகின்றனர். கூட்டத்தில் சிலர் அடுத்த தர்மக்கத்தா சண்முகம் வாழ்க என்று கோஷம் போட சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்து வெளியேறுகிறார்.

சனியன் சண்முகத்துக்கு தர்மகத்தா பதவியை மட்டும் விட்டு கொடுக்க கூடாது. அவன் மட்டும் தர்மகத்தா ஆகிட்டா உங்க தவறுகள் அனைத்தும் வெளியே தெரிந்து விடும் என எச்சரித்து செல்கிறான். பிறகு சௌந்தரபாண்டி நான்கு ஐந்து பூட்டு போட்டிருக்கும் ஒரு அறைக்குள் நுழைய அங்கு கோவில் நகைகளாக இருக்கிறது. பிளாஸ்கட்டில் ஒரு கொலை நடந்த விஷயங்கள் வந்து போக சௌந்தரபாண்டி டேய் சண்முகம் உன்னை தர்மகத்தா ஆகவே விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம்:

கலங்கி நிற்கும் ஆதி.. தமிழால் பாரதிக்கு தெரிய வருமா அவனது காதல்?

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி தாலி காட்டாமல் கல்யாணத்தை நிறுத்திய நிலையில் இன்று, கல்யாண மண்டபத்தில் ஆதியை தாலி கட்ட சொல்ல கையில் தாலியுடன் நிற்கும் ஆதி வேறு கட்டத்தில் தாலியை கீழே போட்டு விடுகிறான். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து ஏன் தாலி கட்ட மாற்ற என்று கேட்க எனக்கு வேறொரு பொண்ணு பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஸ்வேதா என் வீட்டு மருமக நீ தாலி கட்டி தான் ஆகணும் என்று சாரதா சொல்லியும் ஆதி மறுப்பு தெரிவிக்க இனி நீ என் புள்ளையே இல்லை என்று சொல்லி ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். செய்வதறியாது தவித்து நிற்கிறான் ஆதி. தமிழ் பாப்பா அவன் அருகே வர அவன் தமிழை கட்டி கொண்டு கண் கலங்குகிறான். அதன் தொடர்ச்சியாக பாரதி தமிழை கூட்டி கொண்டு ஊருக்கு கிளம்புகிறாள். லதா, பாரதி மற்றும் தமிழ் என மூவரும் பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருக்க ஆதி அங்கு வருகிறான்.

பிறகு இவர்களை காரில் அழைத்து செல்ல தமிழ் உங்களுக்கு பிடித்த பொண்ணு யார் என்று கேட்க அவன் கண்ணாடியை பார்க்க அதில் பாரதியின் முகம் தெரிகிறது. மறுபக்கம் சாரதா இந்த கல்யாணம் நடக்கும் மூன்று மாசத்தில் நடத்தி வைப்பதாக ஸ்வேதாவுக்கு வாக்கு கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment