Advertisment

ரஜினியின் தில்லு முல்லு... பிரபுவின் கன்னிராசி : ஜீ தமிழ் சீரியலில் திரைப்பட காட்சிகள்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial

அண்ணா - கார்த்திகை தீபம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

பல்லவியாக வந்து பாடி கொடுத்த தீபா, மீண்டும் ஏமாறும் கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக வந்து பாடுவது போல நினைத்து பார்த்த நிலையில் இன்று, எல்லா ஏற்பாடுகளும் செய்து கார்த்திக் உட்பட எல்லாரும் பல்லவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தீபா நைசாக வெளியே சென்று பர்தா அணிந்து தனது முகத்தை மறைத்து கொண்டு பல்லவியாக வந்து பாடுகிறாள்.

கார்த்திக் குரலை கேட்டதும் இவங்க தான் உண்மையான பல்லவி என்று சந்தோஷப்படுகிறான். ரெக்கார்டிங் நடந்து முடிய கார்த்திக் நல்லவேளை நீங்க சொன்ன மாதிரி வந்து பாடி கொடுத்துடீங்க. இதனால் எல்லா வேலைகளையும் இன்னைக்கே முடித்தே சொன்ன மாதிரி பாட்டை நல்ல விதமாக ரிலீஸ் செய்ய முடியும் என்று நன்றி சொல்கிறான். பிறகு தீபா வெளியே வந்து மீண்டும் தனது கெட்டப்பை மாற்றி கொண்டு ஆபிஸ் உள்ளே வருகிறாள்.

இவரை பார்த்த கார்த்திக் தீபா இவ்வளவு நேரம் எங்க போயிட்டிங்க என்று கேட்க தீபா ஒருவழியாக எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள். இங்கு ரெக்கார்டிங் நடந்த விஷயம் தெரியாமல் சிதம்பரமும் அபிராமியும் இனி அந்த பல்லவி பாடவே முடியாது, சாதித்து விட்டது போல பேசி சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் தரும் பரணி.. கைதாகும் சௌந்தரபாண்டி?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் சௌந்தரபாண்டியிடம் என் பையன் தேர்தலில் நின்று தர்மகத்தாவாக ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று, வீட்டிற்கு வந்த வைகுண்டம் உன் அம்மாவை பத்தி தப்பா பேசுன அவன் கர்வத்தை அடக்கணும், நீ தர்மகத்தாவாக ஜெயித்து காட்டணும், பரணிக்கு நல்ல புருஷனாவும் வாழ்ந்து காட்டணும் என்று சொல்ல சண்முகம் உங்க ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

அதன் பிறகு கிளினிக்கில் இருந்து வீட்டிற்கு வரும் பரணி இசக்கியிடம் இன்னைக்கு நான் சமைக்கிறேன் என்று சொல்லி விட்டு சமையலுக்கான ஏற்பாடுகளை செய்கிறாள், ண்முகத்திற்கு போன் போட்டு இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன், எல்லாருக்கும் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்துடுங்க என்று அன்போடு பேச சண்முகம் சந்தோஷப்படுகிறான்.

பரணி ஒரு 20 முட்டைக்கு வேக வைக்க தங்கைகள் எல்லாரும் எதுக்கு இவ்வளவு முட்டை என யோசிக்கின்றனர். பிறகு சண்முகம் வந்ததும் எல்லாரும் சாப்பிட உட்கார பரணி சண்முகத்தை எழுப்பி இந்த இலையில் உட்காருங்க என மாற்றி உட்கார வைக்கிறாள். எல்லாருக்கும் அரை முட்டை மட்டுமே வைக்கப்பட்டு இருக்க ஷண்முக சாப்பாட்டுக்கள் 10 முட்டை மறைத்து வைக்கப்பட்டு இருக்க அதை பார்த்து எல்லாரும் பரணியையும் சண்முகத்தையும் கலாய்க்கின்றனர்.

மறுபக்கம் தூங்கி கொண்டிருக்கும் சௌந்தரபாண்டி முத்துபாண்டியே தன்னை கைது செய்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம் :

ஆதியின் ரூமுக்குள் சிக்கிய பாரதி.. உண்மைகள் உடைந்ததா? நடந்தது என்ன?

இதயம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி தமிழ் பாப்பாவுக்கு ரேங்க் ஷீட்டில் கையெழுத்து போட்ட ஆதியிடம் சண்டையிட்ட நிலையில் இன்று, பாரதி மற்றும் லதா இருவரும் சேர்ந்து ஆதி மனதில் இருக்கும் பெண் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக அவன் இல்லாத நேரத்தில் ரூமுக்குள் சென்று ஏதாவது கிடைக்குமா என்று தேடும் போது டிராயரில் இருந்து ஒரு டைரியை எடுக்கின்றனர். 

அந்த டைரி முழுவதும் கவிதைகளாக எழுதப்பட்டிருக்க அதை வெளியே சென்று படித்துக் கொள்ளலாம் என்று இருவரும் எடுத்துச் செல்லும்போது டைரிக்குள் பாரதி மற்றும் ஆதி சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இருக்கிறது. இதைப் பார்த்து விடுவார்களோ என்ற பில்டப் எகிற டைரியை கொண்டு செல்லும் போது அதற்குள் இருந்த போட்டோ நழுவி கீழே விழுந்து விடுகிறது. பிறகு ஆபீஸில் உட்கார்ந்து படித்தால் கேசவ் பார்த்து விடுவான் என்பதால் இருவரும் அதை வீட்டுக்கு கொண்டு போய் படிக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

இதனால் லதாவும் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு பாரதியின் வீட்டிற்கு வந்து விடுகிறாள். இருவரும் அமர்ந்து ஆதி எழுதிய ஒவ்வொரு கவிதையாக படிக்கும் போது அவன் எவ்வளவு ஆழமாக அந்த பெண்ணை காதலிக்கிறான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.  இதற்கிடையில் தமிழ் பாப்பா நீங்க வந்தா தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்க சரி நாளைக்கு பாத்துக்கலாம் என்று தூங்கி விடுகின்றனர்.

மறுநாள் காலையில் பாரதி ஸ்கூட்டியில் ஆபீஸ் வந்து கொண்டிருக்கும் போது திடீரென அவளது ஸ்கூட்டி பென்சராகி விடுகிறது. டைரியை படித்துக் கொண்டிருந்தால் செல்போனுக்கு சார்ஜ் போட மறந்ததால் போனும் சுவிட்ச் ஆப் ஆகி விடுகிறது. இதனால் பாரதி என்ன செய்வது என தெரியாமல் தவிக்க அப்போது அந்த வழியாக வரும் ஆதி பாரதியை காரில் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறான்.

பாரதி சீட் பெல்ட் போட முடியாமல் தடுமாற அவளுக்கு சீட் பெல்ட் போட்டு விடும் போது ஆதிக்கும் பாரதிக்குமான இடைவெளி குறைய இருவருக்கும் ஏதோ ஒரு தடுமாற்றம் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment