Advertisment

விஜய் - சிம்ரன் vs கார்த்திக் - தீபா : ஜீ தமிழில் சீரியலில் விஜய் படம்

ஜீ தமிழின் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம் - அண்ணா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

சிதம்பரத்துக்கு செக்மேட் வைத்த கார்த்தி.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த அபிராமி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவியாக முகத்தை மறைத்து கொண்டு தீபா பாடி கொடுத்த நிலையில் நேற்றும், இன்றும் நடக்க போவது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

அதாவது, கார்த்திக் பல்லவி பாடிய பாடலை யு ட்யூபில் ரிலீஸ் செய்கிறான், அந்த பாடல் படு வைரலாகி செம ட்ரெண்டிங்காகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு வழியாக சிதம்பரத்துக்கு சவால் விட்டபடி பாடலை ரிலீஸ் செய்தாகி விட்டது என கார்த்தியும் சந்தோஷப்படுகிறான்.

இதனை தொடர்ந்து அபிராமி வீட்டிலும் பாடல் ஹிட்டாகி விட்ட விஷயத்தை நினைத்து சந்தோசப்படுகின்றனர். பல்லவியின் பாடல் வெளியான விஷயத்தை அறியும் சிதம்பரம் அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து ஒண்ணுமே நடக்கலைனு சொன்ன இப்போ என்னாச்சு? எப்படி அந்த பல்லவி வந்து பாடினா? சொன்ன மாதிரியே பாட்டை ரிலீஸ் பண்ணிட்டான். உன்னை போய் நம்புனேன் பாரு என திட்டி தீர்க்க ஐஸ்வர்யா எனக்கும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று புலம்புகிறாள்.

அடுத்ததாக கார்த்திக் யூ ட்யூபில் வரும் வியூஸ், லைக்ஸ், கமெண்ட் ஆகியவற்றை படித்து பார்த்து சந்தோசப்பட அபிராமி அந்த பல்லவியை வீட்டிற்கு கூட்டிட்டு வா கிப்ட் கொடுக்கணும் என்று சொல்கிறாள். பிறகு தீபா வர கார்த்திக் அவளிடம் பல்லவி பற்றி பெருமையாக பேசி சந்தோசப்படுகிறான். அடுத்ததாக காரத்திக் மீனாட்சியிடம் வந்து பல்லவி எப்படி வந்தாங்க? அவங்க முகத்தை பார்த்தீங்களா? என்று கேட்க மீனாட்சி பார்க்கல என்று சமாளிக்கிறாள்.

அதன் பிறகு அம்மா அவங்களுக்கு கிப்ட் கொடுக்கணும்னு சொன்னாங்க நீங்க போன் பண்ணி வர சொல்லுங்க எனவும் சொல்லி செல்ல மீனாட்சி என்ன செய்வது என்று யோசிக்கிறாள். மறுபக்கம் அபிராமி தீபாவை பிடித்து பல்லவியை பெருமையாக பேசி திட்டி அனுப்புகிறாள். இதனை தொடர்ந்து மீனாட்சி தீபாவிடம் அபிராமி கிப்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பல்லவியை வர சொன்ன விஷயத்தை சொல்ல தீபா நான் போக மாட்டேன் என பயப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாடல் பாடியது குட்டி தான் ருக்குக்கு தெரியும். ஆனால் குட்டி எப்படி இருப்பார் என்று தெரியாது. அதேதான் இங்கு பல்லவிதான் பாடல் பாடியது. ஆனால் அவர் எப்படி இருப்பார் என்று கார்த்திக்கு தெரியாது

அண்ணா:

தாலியை கழட்டி எறிந்த பாக்கியம்.. பரணிக்காக சண்முகம் எடுக்கும் முடிவு..

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை முத்துப்பாண்டி கைது செய்வது போன்ற காட்சியுடன் சீரியல் முடிவடைந்த நிலையில் நேற்று, சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நின்று ஜெயித்து சௌந்தரபாண்டி செய்த திருட்டு வேலைகள் எல்லாம் வெளியே வர முத்துபாண்டியே அப்பாவை கைது செய்கிறான். இதை பார்த்த பாக்கியம் இவ்வளவு நாளா உன்கூட போய் குடும்பம் நடத்தினேன் பாரு என்று அவமானப்படுத்தி தாலியை கழட்டி முகத்தில் வீசி எரிய சொந்தரபாண்டி பதறி எழுந்து கொள்ள இது கனவு என தெரிய வருகிறது.

அதன்பிறகு சௌந்தரபாண்டி பக்கத்தில் படுத்திருந்த பாக்கியத்தின் தாலியை தொட்டு பார்க்க அவள் பதறி எழுந்து என்ன பண்றீங்க என்று கேட்க தாலி என்று சொல்ல பாக்கியம் தாலியை எதுக்கு அறுக்கறீங்க என்று கேள்வி கேட்க இவர் நான் அறுக்கல, நீ தான் கழட்டி தூக்கி எறிந்த என்று சொல்கிறார். சண்முகம் மட்டும் தர்மகத்தா தேர்தலில் நின்னு ஜெயிச்சிட்டா அவ்வளவு தான், ஒன்னு அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணும், இல்லனா தூக்குல தான் தொங்கணும். சண்முகத்தை எப்படியாது தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

மேலும் சனியனை கூட்டிட்டு சண்முகம் வீட்டிற்கு வந்து பரணிக்கு போன் செய்து வெளியே வர சொல்கிறார். வெளியே வந்த பரணியிடம் எனக்கிட்ட இருப்பது இந்த தர்மகத்தா பதவி ஒன்னு தான், அதனால் சண்முகத்தை தர்மகத்தா தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லுமா என்று கெஞ்ச பரணியும் சரி என்று சொல்லி விடுகிறாள். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பரணி தூங்கி கொண்டிருக்கும் சண்முகத்தை மயில் இறகை வைத்து வருட அவன் கண் விழித்து என்னாச்சு என்று கேட்கிறான்.

பரணி உன்கிட்ட ஒன்னு சொல்லணும் என்று சொன்னதும் சண்முகம் ஐ லவ் யூ-னு சொல்ல போற அதானே என்று கேட்க பரணி இல்லை நீ தர்மக்கத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று சொல்கிறாள். சண்முகம் ஓ இதுக்காக தான் சமையல் செய்து கொடுத்து கவனித்து கிட்டியா என்று திட்டி நான் தேர்தலில் கண்டிப்பா நிற்பேன் என்று சொல்லி விடுகிறான்.

அதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட சண்முகம் குடை பிடிக்க அவள் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என கோபப்படுகிறாள். தொடர்ந்து பழையபடி அவனிடம் வெறுப்பை காட்ட வைகுண்டம் சண்முகத்திடம் என்னாச்சி என்று கேட்க பரணி ஒரு விஷயம் கேட்டா நான் முடியாதுனு சொல்லிட்டேன் என்று சொல்ல வைகுண்டம் அதை முழுதாக கேட்காமல் எதுவாக இருந்தாலும் என் மருமகளுக்காக செய்து கொடு என்று சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு பரணி சண்முகத்துடன் வண்டியில் இடைவெளி விட்டு உட்கார்ந்து செல்ல ஷண்முகம் பாட்டெல்லாம் வைத்து சமாதானம் செய்ய முயற்சி செய்ய போனை தூக்கி போட்டு விடுகிறாள். பிறகு தர்மகத்தா தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னதும் சந்தோசப்பட்டு அவனை நெருங்கி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதயம் :

காதலியை கண்டுபிடிக்க வேவு பார்க்கும் பாரதி.. ஆதி கொடுத்த ஷாக்

இதயம் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி ஸ்கூட்டி பெஞ்சராகி வழியில் நிற்க ஆதி அவளை ஆபிஸ் அழைத்து சென்ற நிலையில் நேற்று, லதா மற்றும் பாரதி என இருவரும் ஆதி எழுதிய கவிதைகள் முழுவதையும் படித்து முடித்து விட அதில் யார் அந்த பெண் என்ற விஷயம் தெரிய வராததால் ஆதியின் போனை பார்த்தால் உண்மை தெரிய வரும் என முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு ஆதியின் போனை எடுக்க அடிக்கடி ரூமுக்குள் சென்று வர ஆதி தொடர்ந்து போன் பேசி கொண்டே இருக்கிறான். 

இவர்களின் நடத்தையில் ஆதிக்கும் சந்தேகம் வருகிறது, ஆனால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு மீட்டிங் என்று ஆதியை அழைத்து செல்ல அவன் போன் ரூமில் இருப்பதை பார்த்து லதாவும் பாரதியும் உள்ளே வருகின்றனர்.

ஆதியின் போனை எடுக்க அதில் பாஸ்வோர்ட் போடப்பட்டு இருப்பதால் போனை அன்லாக் செய்ய முடியாமல் போகிறது. திடீரென்று ஆதியும் திரும்பி வர இவர்கள் சோஃபா பின்னாடி ஒளிந்து கொள்கின்றனர். இதை கவனித்து விடும் ஆதி காதலியிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவது போல் பேசி வெறுப்பேற்றுகிறான். இறுதியாக வேண்டுமென்றே இவர்களை ரூமுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே கிளம்பி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Karthigai Deepam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment