Advertisment

தப்பித்த சண்முகம்... குழந்தையையும் பொய் சொல்ல வச்சிட்டீங்களே! ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Anna KD

கார்த்திகை தீபம் - அண்ணா

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

பாட்டி வைத்த போட்டி.. விலகிய கார்த்திக், தனி ஆளாக அசர வைத்த தீபா

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்பி பாட்டி கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் மாறி பேசி கொள்ள வேண்டும் என்ற போட்டியை வைத்த நிலையில் இன்று, முதலில் அருண் ஐஸ்வர்யா போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து மீனாட்சி ஆனந்ததாகவும் ஆனந்த் மீனாட்சியாகவும் மாறி நடிக்க தொடங்கினர்.

இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து அருணாச்சலம், அபிராமி ஆகியோர் போட்டியில் பங்கேற்கின்றனர். அபிராமி அருணாச்சலமாக மாற அருணாச்சலம் அபிராமியாக மாறி நடிக்க தொடங்குகிறார். அருணாச்சலம் அபிராமி போல கம்பீரமாக ஷோபாவில் உட்கார்ந்திருக்க அருணாச்சலம் போல் நடந்து வரும் அபிராமி என்ன நாச்சியா என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என்று கேள்வி கேட்கிறாள்.

இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து கார்த்திக், தீபாவிற்கான வாய்ப்பு வருகிறது. ஆனால் கார்த்திக் நான் இதில் பங்கேற்கவில்லை, ரெண்டு கேரக்டரையும் தீபாவே பண்ணட்டும் என்று சொல்ல தீபா கார்த்திக்கை போலவும் தன்னை போலவும் மாறி மாறி பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாள். கடைசியில் இந்த போட்டியில் ஜெயித்தது தீபா தான் என பாட்டி அறிவிக்க ஐஸ்வர்யா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

தப்பித்த ஷண்முகம், வைகுண்டத்தை தூக்க வந்த முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த ஷாக்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ஜெயிலில் இருந்து தப்பித்த நிலையில் இன்று, வீட்டில் கனி அண்ணனை நினைத்து அழுது கொண்டிருக்க பரணிக்கு போன் செய்யும் முப்பிடாதி சண்முகம் ஜெயிலில் இருந்து தப்பித்த விஷயத்தை சொல்ல, அதை கேட்டு தங்கைகள் சந்தோசப்படுகின்றனர். பரணி அவன் பெரிய தப்பு பண்ணிட்டான், இதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனையே பெருசாக போகுது என்று சொல்கிறாள்.

முப்பிடாதி சண்முகம் தப்பித்தது தான் நல்லது, இல்லனா உங்க அண்ணன் அவனை ஒரு வழி பண்ணி இருப்பான் என்று சொல்லி போனை வைக்கிறார். விடியற்காலை 5 மணிக்கு யாரோ வீட்டின் கதவை தட்ட பரணி கதவை திறக்க உள்ளே வந்த சண்முகம் எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடு என்று சொல்லி சாப்பிட திரும்பவும் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது.

சண்முகம் ஒளிந்து கொள்கிறான், பரணி கதவை திறக்க முத்துப்பாண்டி சண்முகம் எங்கே என்று கேட்க நீ தானே கூட்டிட்டு போன என்று பதில் சொல்கிறாள். அவன் ஸ்டேஷனலில் இருந்து தப்பித்து விட்டான் என்று சொல்லி வைகுண்டத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முடிவு செய்கிறான். பரணி நான் தான் அவன் பொண்டாட்டி வேணும்னா என்னை கூட்டிட்டு போ என்று பரணி ஷாக் கொடுக்க, முத்துப்பாண்டி அவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

முத்துப்பாண்டி பேசியதை எல்லாம் கேட்டு சண்முகம் கோபத்தில் இருக்க பரணி உன்னால் எவ்வளவு பிரச்சனை பார்த்தாயா என்று திட்டுகிறாள். உன்மேல எந்த தப்பும் இல்லனு நிரூபி, அதுவரைக்கும் உன்னுடைய அப்பா, தங்கச்சி என மொத்த குடும்பத்துக்கும் பிரச்சனை தான் என்று சொல்ல, சண்முகம் சரி என்று அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம் :

ஆதியை பார்க்க பொய் சொல்லி உள்ளே வந்த தமிழ்.. பாரதிக்கு ஷாக்

இதயம், சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதியின் ஆபிஸ்க்கு ஐடி ரைடு வர டாகுமெண்ட் அனைத்தும் பாரதியிடம் இருந்ததால் கை நீட்டி வாங்கிய சம்பளத்திற்காக அவள் ஆபிஸ் வந்த நிலையில் இன்று, பாரதி ஆபிசில் ரைடு வந்த ஆபிசர்களிடம் சட்ட ரீதியாக பேசி டாகுமெண்ட் அனைத்தையும் எடுத்து காட்டி கொண்டிருக்க, மறுபக்கம் ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வந்த தமிழ் பாப்பா அம்மா எங்கே என்று கேட்க. பாட்டி அம்மா ஆபிஸ் போய் இருப்பதாக சொல்கின்றார்.

உடனே தமிழ் ஆதியை பார்க்க இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று பிளான் போட்டு எனக்கு உடனே அம்மாவை பார்க்கணும் என்று அடம் பிடிக்க தொடங்குகிறாள். அவளது பாட்டி எவ்வளவோ சமாதானம் செய்தும் தமிழ் அழுகையை நிறுத்தாததால் மணியை அழைத்து குழந்தையை பாரதியிடம் கொடுத்து விட்டு வர சொல்கிறார். இதனையடுத்து மணி குழந்தையை அழைத்து கொண்டு ஆதியின் ஆபிசுக்கு வருகிறான்.

அங்கு ஐ டி ரைடு நடப்பதால் அனுமதி இல்லை என்று சொல்லி உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மணி குழந்தைக்கு வீசிங் ப்ராப்லம் இருக்கு ரொம்ப நேரம் அழுதால் மூச்சு திணறல் வந்து விடும் என்று சொல்லியும் உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். தமிழ் பாப்பாவே எங்க அம்மாவை பார்த்திட்டு வந்துடுறேன் என்று கேட்க சீக்கிரம் வந்துடனும் என்று சொல்லி குழந்தையை அனுப்பி வைக்கின்றனர்.

தமிழ் உள்ளே ஓடி வர ஆதி குழந்தையை பார்த்ததும் சந்தோசப்பட பாரதி அதிர்ச்சி அடைகிறாள். மேலும் பொய் சொல்லி உள்ளே வந்த விஷயம் பாரதிக்கு தெரிய வர இன்னும் ஷாக் ஆகிறாள். தமிழ் பாப்பா ஆதியுடன் விளையாட அவனும் குழந்தையை கொஞ்சுகிறான். பிறகு தமிழ் பாப்பா கதை சொல்ல சொல்லி கேட்க ஆதி பாரதியின் மீதான காதலை கதையாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment